Current Affairs-2018 in Tamil,
Dinamani ,TNPSC, UGC-NET, RRB, IBPS and othe competitive Examination
2018
- ஒரு பின்னோக்கிய
பார்வை - விருதுகள்
விருதுகள்
- 2018
- ஜன. 25: இளையராஜா, பாரம்பரிய இசைக் கலைஞர் குலாம் முஸ்தபா கான் ஆகியோருக்கு "பத்ம விபூஷண்' விருதும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, பில்லியர்ட்ஸ் வீரர் பங்கஜ் அத்வானி ஆகியோருக்கு "பத்ம பூஷண்' விருதும் வழங்கப்பட்டது.
- மார்ச் 17: நெல், பருப்பு வகைகள், திணைகள் உள்ளிட்ட வேளாண் பொருள்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கியதற்காக, 2015-16 ஆம் ஆண்டுக்கான "கிருஷி கர்மான் விருதை' தமிழ்நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
- ஏப். 13: 65-ஆவது "தேசிய விருதுகள்' மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. இதில், மறைந்த ஹிந்தி நடிகர் வினோத் கன்னாவுக்கு "தாதா சாகேப் பால்கே' விருதும், மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு "சிறந்த நடிகை' விருதும்
- அறிவிக்கப்பட்டன.
- ஏப். 30: சென்னை அடையாறிலுள்ள புற்றுநோய் மையத்தின் நிர்வாக இயக்குநரும், மருத்துவருமான வி.சாந்தாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் "வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கினார்.
- ஜூலை 5: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாதெமி சார்பில், கடம் வித்வான் "விக்கு' விநாயக்ராமுக்கு "சிறப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
- அக். 24: இந்திய மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியதற்காகவும், உலக அமைதிக்குப் பங்களித்ததற்காகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு தென் கொரிய நாட்டின் உயரிய விருதான "சியோல் அமைதி விருது' வழங்கப்படுவதாக அந்நாடு அறிவித்தது.
- அக். 26: வேளாண்துறையில் அளப்பரிய பங்களிப்பை அளித்ததற்காக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு "உலக வேளாண் விருதை' குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தில்லியில் வழங்கினார்.
- நவ. 6: எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் மாற்றுத் திறனாளி பெண் அருணிமா சின்ஹாவுக்கு பிரிட்டனில் உள்ள ஸ்ட்ராத்கிளைட் பல்கலைக்கழகம் "டாக்டர் பட்டம்' வழங்கி கெளரவித்தது.
- டிச. 5: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய "சஞ்சாரம்' நாவலுக்கு 2018-ஆம் ஆண்டின் "சாகித்ய அகாதெமி விருது' அறிவிக்கப்பட்டது.
- டிச. 8: தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் நடத்தப்பட்ட "பாரதி திருவிழா'வில் திரைப்பட இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு "பாரதி விருது' வழங்கப்பட்டது.
- டிச. 23: எரிசக்தி பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக, ரயில்வே துறைக்கு 17 "தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள்' கிடைத்துள்ளன
EmoticonEmoticon