தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)
நான்கு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப நேர்முகத் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நான்கு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் நேர்முகத் தேர்வு தேதிகளை அறிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணி அலுவலர்
பணியில் காலியாக உள்ள 5 இடங்களுக்கு நடந்த தேர்வில் தற்காலிகமாக 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான நேர்முகத் தேர்வு நவம்பர் 2-ஆம் தேதியன்று நடைபெறும்.
இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் பணியில் 3 இடங்கள் காலியாக உள்ளன. அதில் தற்காலிகமாக 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நவம்பர் 11-ஆம் தேதியன்று நேர்முகத் தேர்வு நடைபெறும்.
ஒருங்கிணைந்த பொறியியல் பணி
பணிகளில் உள்ள 330 காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் 665 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நேர்முகத் தேர்வு வரும் அக்டோபர் 25ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை நடைபெறும்.
வேளாண்மை விரிவாக்கப் பணிகள்
தொகுதியில் அடங்கிய வேளாண்மை அலுவலர் பணியில் 323 இடங்கள் காலியாக இருந்தன. அவற்றுக்கு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்று 613 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் அக்டோபர் 29 முதல் நவம்பர் 9ம் தேதி வரை வடக்கும்.
EmoticonEmoticon