UNION PUBLIC SERVICE COMMISSION,
Advt No:01/2019-ENGG,
Advt Date:26-09-2018
Last Date :22-10-2018
Engineering Services (Preliminary / Stage I) Examination - 2019
யுபிஎஸ்சி பொறியியல் சேவை தேர்வு 2019: காலிப் பணியிடம், தேர்வு தேதி, பாடத்திட்டம் அறிவிப்பு!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணிகளுக்கு தேர்வு, பணியிடம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் பொறியியல் சேவைக்கான தேர்வு - 2019 அறிவிப்பினை தனது அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in தலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 26ம் தேதி முதல் வரவேற்கப்படுகின்றன. 2018 அக்டோபர் 22 அன்று மாலை 6 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் அனுமதிக்கப்படும். இதற்கான விண்ணப்பத்தினை யுபிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதலத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
துறை :
- சிவில் இன்ஜினியரிங்,
- மெக்கானிக்கல் இன்ஜினியரிங்.
- எலக்ட்ரானிக்கல் இன்ஜினியரிங்,
- எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினியரிங்/
காலிப் பணியிடம் : 581
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பொறியியல் பட்டம்
வயது வரம்பு : 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். (எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப் படி
வயதுவரம்பில் தளர்வு உண்டு)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 22
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு விண்ணப்பம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த மேலும் விபரங்களுக்கு Advertisement எனும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை:-
வழி 1 : யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள "Notification" பக்கத்தினை தேர்வு செய்ய வேண்டும்.
வழி 2 : upsconline.nic.in இணைய முகவரிக்குச் சென்று "Engineering Services Examination" பட்டனை கிளிக்
செய்ய வேண்டும்.
வழி 3 : அதனுள் Part I and II என இருபகுதிகள் காண்பிக்கப்படும்.
வழி 4 : அதனை முழுமையாக படித்துவிட்டு பக்கத்தின் கடையில் உள்ள "Yes" பட்டனை கிளிக் செய்யவும்.
வழி 5 : அங்கே உங்களுக்காக விண்ணப்பம் வரும். அதில் வயது, கல்வித் தகுதி உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்ய வேண்டும்.
வழி 6 : விண்ணப்பத்தினை பூர்த்திசெய்த பிறகு, part II பதிவு செய்து தேர்வுக் கட்டணம், தேர்வு நடைபெறும் இடம்,
மற்றும் விண்ணப்பதாரரின் புகைப் படத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும். வழி 7 : இறுதியாக "Agree" பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
Online Application
EmoticonEmoticon