TN Labour Department PG Diploma in Labour Management Admission Notification 2018

Government of Tamilnadu
Tamilnadu Labour Department,Chennai,

PG Diploma in Labour Management,

தொழிலாளர் மேலாண்மை பட்டயப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை

தமிழக அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் 1973-ல் ஆரம்பிக்கப்பட்டது. சென்னை காமராசர் சாலையில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவரும் இக்கல்வி நிலையம் புதுடெல்லியில் உள்ள சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு மற்றும் நொய்டாவிலுள்ள வி.வி. கிரி தேசியத் தொழிலாளர் கல்வி நிலையத்துடன் இணைந்து புத்தறிவுப் பயிற்சிகளை நடத்திவருகிறது.

இக்கல்வி நிலையம் 2001 முதல் முழுநேர மற்றும் பகுதிநேர ஆராய்ச்சி (பிஎச்.டி.) படிப்பு நடத்துவதற்குச் சென்னைப் பல்கலைக்கழகத்தால் ஓர் ஆராய்ச்சி நிலையமாக அங்கீகரிக்கப்பட்டது. இதில் 2018-19 ஆண்டிற்கான இளங்கலை, முதுகலைப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.

பட்டயப்படிப்பு
தொழிலாளர் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டயப்படிப்பு (பி.ஜி.டி.எல்.ஏ) மற்றும் தொழிலாளர் சட்டங்களும் மற்றும் நிர்வாகவியல் சட்டமும் குறித்த ஓராண்டு (பகுதிநேர - வார இறுதி நாட்களில்) பட்டயப்படிப்பு போன்ற துறைகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்படவிருக்கிறது.

வேலைவாய்ப்பு

இக்கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்களைப் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவள மேம்பாட்டு மேலாளராக நியமனம் செய்ய, மாணவர்களைத் தேர்வுசெய்து, பணி நியமன உத்தரவு வழங்குகிறார்கள். இதன்படி, பல்வேறு மாணவர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் மனிதவளத் துறையில் பணிபுரிந்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு www.labour.tn.gov.in என்ற இணையதளத்தையும் அல்லது 044-2844 0102, 2844 - 5778, 9884159410 ஆகிய எண்களுக்குத் தொடர்புகொள்ளலாம்.


EmoticonEmoticon