NITC Lab Technician Training Programme 2018-2019 | Central Government Training

National Industrial Training Centre ,
30-34, Sewak Park, Opp. Metro Pillar # 771, 
Dwarka more Metro Station, Main Najafgarh Road, New Delhi-59 ,
Phone: 011-49054455, 011-65286600,
e-mail: mail@nitcindia.com ,
Website: www.nitcindia.com,


லேப் டெக்னீஷியன் பயிற்சி பெற அரிய வாய்ப்பு!

மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் சுய தொழில்முனைவு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தொழிற்சாலை பயிற்சி மையமானது (National Industrial Training Center) புதுடெல்லி.

இந்தப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சியை முடித்தவர்களுக்கு இந்திய அரசால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு மத்திய, மாநில அரசுகளில் வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது.

பயிற்சி துறைகள்:
இப்பயிற்சி மையத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் 234, பிசியோதெரபி டெக்னீஷியன் 63, டென்டல் லேப் டெக்னீஷியன் 52, ரேடியாலஜி டெக்னீஷியன் 42 இடங்கள் என மொத்தம் 391 இடங்களை நிரப்புவதற்கான பயிற்சி மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் பிசியோதெரபி டெக்னீஷியன் மாணவர்களுக்கு ஒரு வருடமும், டென்டல் லேப் டெக்னீஷியன் மற்றும் ரேடியாலஜி டெக்னீஷியன் மாணவர்களுக்கு இரண்டு வருட காலமும் பயிற்சிக் காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் பயிற்சி மையத்தில் இரண்டு வருட பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு இந்திய அரசின் தேசிய தொழில்சார் மையத்தால் (National Council for Vocational Training) தேசிய வர்த்தக சான்றிதழ் வழங்கப்படுகிறது (National Trade Certificate). பயிற்சியை சிறப்பாக முடித்து இச்சான்றிதழை பெறுபவர்கள் மத்திய, மாநில அரசுகளின் அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

கல்வித் தகுதி: 
தேசிய தொழிற்சாலை பயிற்சி மையத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டர், பிசியோதெரபி டெக்னீஷியன் மற்றும் டென்டல் லேப் டெக்னீஷியன் பணிகளுக்குப் பயிற்சி பெற விரும்புவோர் பத்தாம் வகுப்பிலும், ரேடியாலஜி டெக்னீஷியன் பயிற்சி பெற விரும்புவோர் பன்னிரண்டாம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். 

உதவித்தொகை:
இப்பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்ட பின், பட்டியலின மாணவர்கள் இந்திய அரசின் ஸ்கார்ஷிப்பிற்கு விண்ணப்பித்து பயிற்சிக் கட்டணத்தை செலுத்தலாம்.   மேலும் விரிவான தகவல்களுக்கு www.nitcindia.com என்ற இணையதளத்தைப் 
பார்க்கவும். 

வயது வரம்பு: 
இப்பயிற்சிகளில் சேர விரும்புவோர் ஆகஸ்டு 1, 2018 தேதியில் குறைந்தபட்சம் 14 வயது நிரம்பியவராக இருத்தல் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.nitcindia.com   என்ற இணையதளம் சென்று விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து முழுமையாகப் பூர்த்தி செய்து டிடி ரூ.250 உடன் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

சேர்க்கை பதிவுக் கட்டணமாக ரூ.500 செலுத்தி விண்ணப்பித்தல் அவசியம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.6.2018

Further Details


Online Application




EmoticonEmoticon