Tips for Assure a Successful Job Interview and Good Employee in Office-Know your Position Now

நேர்முக தேர்வில்  வெற்றி பெற சில யோசனைகள்:

பிரச்னைகள் இல்லாவிட்டால் நாம் ஓட மாட்டோம், சோம்பிகிடப்போம். எனவே எப்போதும் பிரச்னைகளை கண்டு ஒதுங்காமல், அதை எதிர்கொள்ளும் திறமையை வளத்து கொள்ளுங்கள் அது இன்டெர்வியூவாக இருந்தாலும், வாழ்கையாக இருந்தாலும் சரி...

அடிப்படை அறிவு:
ஒரு மரத்தின் உச்சியை அடைய அணிலை வேலைக்கு அமர்த்துவீர்களா அல்லது ஒரு குதிரையை அமர்த்துவீர்களா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.இதே போல்தான் வேலை தேடும் போது நம் இலக்கு என்ன, என்ன பணிக்கான ஆட்கள் தேர்வு நடக்கிறது, இதில் சேர்ந்தால் நேரடியாகவே, மறைமுகமாகவே நமது இலக்கை எட்ட முடியுமா என்று யோசித்தபின் விண்ணப்பிப்பது வெற்றிக்கான வாசல் கதவை திறக்கும் என்பதை மறக்காதீர்கள்.

அப்டேட் அவசியம்:
ஒரு நேர்முகத்தேர்வில் வெற்றிபெற வேண்டுமெனில், அதற்கு அடிப்படை அப்டேட்தான். நம்மைச்சுற்றியும், நம்துறையை சுற்றியும் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனிக்க தவறினால் நமது பாடு நேர்முகத்தேர்வில் திண்டாட்டம் ஆகிவிடும்.எனவே நம்மை சுற்றி நிகழும் நாட்டு நடப்புகளை அவ்வப்போது செய்திதாள், தொலைக்கட்சிகள் மூலம் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். இது நேர்முகத்தேர்வில் எளிதாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க உதவும்.

இதுவே இறுதி வாய்ப்பு:
பொதுவாக, வளர்ச்சியை விரும்பும் ஒரு நிறுவனம், திறமையான ஊழியர்களை கண்டால் தக்க சன்மானம் கொடுத்து தங்களுடன் வைத்துக்கொள்ளவே விரும்பும். எனவே நேர்முகத்தேர்வில் நம்முடைய கிரியேட்டிவ் திறனை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இதுவே இறுதி வாய்ப்பு என்று எண்ணும் போது அது நிச்சயம் சாத்தியப்படும்.

பலம், பலவீனம்:
வழக்கத்தைவிட உற்சாகமாக இருப்பது, நன்கு உடை உடுத்தி இருப்பது, நன்றாக பேசுவது ஆக மொத்தத்தில், இன்டர்வியூ செய்கிற அரை மணி நேரத்தில், மிகச் சிறந்த ஒரு ஊழியராக இருப்பேன் என்று சொல்லி 'இம்ப்ரஸ்' செய்தால் மட்டும் போதாது.நம்முடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை மிகத்தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் இல்லை என்றால், சில சமயத்தில் ஏமற்றத்தை சந்திக்க நேரிடும்.

ஆங்கிலப் புலமையும், ஆட்டிட்யூடும்:
மாறிவரும் நகர வாழ்க்கை, மேற்கத்திய நாகரிகம், அறிவியல் வளர்ச்சி இவற்றின் தாக்கம் நம்மை மெல்ல மெல்ல மாற்றிவிட்டது என, காரணங்களை அடுக்காமல் முதலில் ஆங்கிலத்தில் பேசவும், வாசிக்கவும் நமது திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம்.ஒரு நிறுவனம் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் போது, இவரை கொண்டு எப்படி தொழிலை பல்வேறு மாநிலங்களுக்கு விரிவுபடுத்தலாம் என பல்வேறு விதமாக யோசிப்பார்கள், எனவே அதற்கு ஏற்றார் போல் தங்களை தயார் செய்து கொள்வது அவசியம்.

சிந்தனைக்கான பரிசோதனை:
உயர்ந்த சிந்தனைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்தால் அவை ஒரு காலத்தில் பெருஞ்செயல்களாக உருவெடுக்கும். எனவே நமது சிந்தனைக்கு எங்கு சரியான வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதை அறிவது அவசியம். அதோடு நமது சிந்தனைகளை அவ்வப்போது பரிசோதித்து பார்ப்பது மிக அவசியம்.பணிபுரியும் அலுவலகத்திலும் தனது பணியில் எளிதில் வெற்றி பெற சில யோசனைகள்:

ஒரு வேலை சிறப்பாக எப்படி செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்வதன் மூலம் பல நன்மைகள் உண்டாகின்றன. சிறப்பாக தொழில் செய்வதன் மூலம் கிடைக்கும் முன்னேற்றமும், பதவி உயர்வும் நம் கனவுகளை நிஜமாகுவதுடன், சக பணியாளர்கள் மத்தியில் மரியாதையையும், கவுரவத்தையும் உண்டாக்குகிறது. உங்கள் பணித்திறனை எடுத்துக் காட்டி, அலுவலகத்தில் உங்களை முன்னிலைப்படுத்துவதன் மூலம் உங்கள் கடின உழைப்புக்கான பரிசுகளை எளிதாக பெற முடியும். எனவே, நல்ல பணியாளனாக இருக்க எவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை இங்கு அறியலாம். 

1. நிறுவனத்தின் கொள்கைகளை மதித்தல்: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை பணியாளர்களுக்கு விளக்க ஊழியர் கையேடு அல்லது தகவல் விளக்கப் பிரிவை தங்கள் வலைத்தளத்தில் ( webbsite) உருவாக்கியுள்ளன. அதில், நீங்கள் பணியில் கடை பிடிக்கவேண்டிய வேண்டிய கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இவற்றை படித்து, குறியீடாகக் கொண்டு, அதன்படி நாம் திறமையுடன் செயல்படுகிறோமா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்து கொள்ள வேண்டும். இதிலுள்ள தகவல்கள் பொதுவாக சாதாரண அறிவுக்கு உட்பட்டதாக இருந்தாலும், சில அம்சங்கள் உங்களுக்கு விளங்கவில்லை என்றாலோ அல்லது சில அம்சங்களால் நிறுவனத்திலுள்ள அல்லது வெளியிலுள்ள யாருக்கேனும் பாதிப்பு ஏற்படும் என்று நீங்கள் கருதினாலோ இது குறித்து நிர்வாகத்திடம் நீங்கள் கேட்டறியலாம். 

2. நிறுவனத்தின் சொத்துக்கள் மீது அக்கறை: ஒரு நிறுவனத்தின் அலுவலகத்திலிருந்து, தொழிற்சாலையிலுள்ள இயந்திரம், அலுவலகத்திலுள்ள புரஜக்டர், வெளியில் சென்று டெலிவரி அளிக்கும் வாகனம், மற்றும் பலவகை கருவிகள், பொருள்கள் வரை அனைத்து நிறுவன சொத்துக்களும் உங்கள் பொறுப்பிலுள்ளதால், இந்த சொத்துக்களை தனது சொந்த சொத்துக்களைப்போல் பாவித்து, அனைவருக்கும் பலனளிக்கும் விதத்தில் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். 

3. பணியில் ஒழுங்கு: நீங்கள் வேலை செய்வதற்காக உங்கள் இடத்திற்கு செல்லும்போது, உங்கள் மேலாளர் உங்களை நிறுத்தி இன்றைக்கு உங்கள் வேலையை விரைவாக முடிக்கக் கூறியதும், சரி எனக் கூறிவிட்டு உங்கள் இடத்துக்கு செல்கிறீர்கள். மறு நாள் மேலாளர் கூப்பிட்டு, நீங்கள் மறந்து போன வேலைகளை நினைவூட்டி இந்த வார இறுதிக்குள் கொடுக்கப்பட்ட வேலைகள் அனைத்தையும் முடிக்க வேண்டும் என்று கூறுகின்றார். இது போன்ற சமயத்தில் நீங்கள் உங்களுக்கு வழங்கப்பட்ட தினசரி வேலைகளை மறக்காமல் இருக்க தனி குறிப்பேட்டில் எழுதி வைத்து வேலைகளை செய்ய வேண்டும். நல்ல வேலைக்காரர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணி விபரங்களையும், முக்கியக் குறிப்புகளையும், தினசரி குறிப்பேட்டிலோ, அல்லது செல்போனிலோ குறித்து வைத்துக் கொண்டு, தனது தினசரி, வாராந்திர வேலைகளை சிறப்புடன் செய்கின்றனர். வழங்கப்பட்ட வேலைகளை காலத்தில் முடிக்க இந்த ஒழுங்கு முறை உதவுகிறது. 

4. காலந்தவறாமை: பொதுவாக அனைத்துப்பணியாளர்களிடமும், நிர்வாகம் எதிர்பார்க்கும் 100 விதமான திறன்களில் முக்கியமானது காலம் தவறாமல் அலுவலகத்துக்கு வருவதாகும். எனவே தொழிலாளர்கள் சரியான நேரத்துக்கு வரும் வழக்கத்தை கடைபிடிப்பதோடல்லாமல், இயன்றவரை காலக்கெடுவுக்குள் வர வேண்டும். உங்களின் பணி நேரம் காலை 9 மணி என்றால் கூடுமானவரை 8:45 மணிக்கே நீங்கள் அலுவலகத்தில் நுழைந்து விட வேண்டும். உங்கள் முதலாளி வெள்ளிக்கிழமை மதியத்துக்குள் ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்று உங்களிடம் கூறி இருந்தால் அதை, ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக நீங்கள் முடித்திருந்தால் நிச்சயம் அந்த நிறுவனம் எந்த வேலைக்கும் உங்களையே சார்ந்திருக்கும். எனவே காலம் 
தவறாமையும், காலத்தை நிர்வாகம் செய்யும் திறனும் நல்ல பணியாளனுக்கு அவசியம். 

5. நம்பகத்தன்மை: அலுவலகத்தில் முதலாளியாகட்டும், சக தொழிலாலர்களாகட்டும் அவர்கள் எதிர்பாராத நேரங்களில் ஆச்சரியமூட்டும் 
வகையில் நாம் நடந்து கொள்ளும்போது அவர்களிடையே நம்மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. ஆனால் அது நன்மை தரும் ஆச்சரியமாக இருக்க வேண்டும். உங்கள் அலுவலகத்தில் ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில், அவரால் நின்று போகும் வேலையை நீங்கள் செய்து, அன்றைய வேலைக்கு பாதிப்பில்லாமல் உங்கள் பணித் திறமையை காட்டும் போது உங்கள் மீதான நம்பகத் தன்மை முதலாளியிடமும், சக தொழிலாளியின் மத்தியிலும் அதிகரிக்கும். இது போன்ற நம்பகத் தன்மை நல்ல பணியாளனுக்கு அவசியம். 

6. முக்கியத்துவம்: அனைவரும் உங்களை சார்ந்திருக்கும் நிலையில், நிறுவ
னத்தின் மிகவும் நம்பகமான வேலைகளைச் செய்யவும் நீங்கள் தேர்ந்தேடுக்கப்படக்கூடும். உங்கள் வேலையில் புது, புது உத்திகளைக் கையாண்டு உங்கள் பணித்திறன்களை வெளிப்படுத்த விரும்பினால் நிறுவனத்தின் மூலம் அதற்கான திறன் மேம்பாட்டு கல்வியில் சேர்ந்து பயனடையலாம். பலனளிக்குமானால், சக தொழிலாளர்களின் கருத்தறிந்து அவர்களுக்கும் அந்த திட்டத்தின் மூலம் பயிற்சி அளித்து, நிர்வாகத்துக்கு பலனளிக்கலாம். எப்போதும் நிறுவனம் குறித்த அனைத்து தகவல்களையும் பெறுவதில் கவனமாக இருங்கள். நிறுவனத்துக்குள் நடைபெறும் அனைத்து 
துறை கூட்டங்களின் விபரங்கள், அலுவலகத்திற்குள் அனுப்பப்படும் சுற்றறிக்கை விபரங்கள் இவற்றை தெரிந்து கொள்வதால் நிர்வாகம் கேட்கும் 
அனைத்து விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கலாம். இதனால் உங்கள் பணி, முக்கியத்துவம் வாய்ந்த பணியாக இருக்கும். 

7.திறமையான தகவல் தொடர்பு: ஒரு அலுவலகத்தின் தலைமை நிர்வாகியாக இருக்கும் நிலையில், தொழில்நுட்ப வல்லுனர்கள், படைப்பாளிகள், நிர்வாகிகள் என அனைவரையும் அரவணைத்து செல்கிறோம். அவர்கள், பிரச்னைகளை நம் கவனத்திற்கு கொண்டு வரும் போது, உரிய மரியாதை
யுடன், முடிந்தவரை தீர்க்கும் கடமை உங்களுக்கு உள்ளது. அதே சமயம் அவர்களின் எல்லாத் துன்பங்களையும் நீங்கள் தோளில் போட்டு சுமக்க முடியாது. தகவல் தொடர்பு பணியாளர்கள் சந்திப்பு அறைகளில் ( meetting room) அமர்ந்துகொண்டு எப்போதும் சர்ச்சைக்குள்ளாகும் பணியாளர்களுடன் மெயில் மூலம் அனல் பறக்க தகவல் அனுப்புவர். அவர்களும் மெயில்களை பதிலுக்கு சூடாக அனுப்பி வைத்துவிட்டு, பிறகு வந்து வருத்தம் தெரிவிப்பதுண்டு. இது போன்ற நேரங்களில் மெயில்களை அனுப்பும் பொது ஒரு முறைக்கு 2 முறை படித்துப்பார்த்துவிட்டு அனுப்பி, சர்ச்சையில்லாமல் 
பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் சில சமயங்களில் இது தொழிலாளர் (HR) பிரச்னைகளாகவும் மாறிவிடும். எனவே கூடுமானவரை மெயில் வழி தகவல்கள் அனுப்புவதைக் கைவிட்டு பிரச்னைக்குரிய பணியாளரை நேரில் அழைத்துப் பேசுவதே நல்லது. 

8. நேர்மை அறிவுடன் செயல் படுதல்: சில வேளைகளில் இதர பணியாளர்களுடன் பிரச்னை ஏற்படும்போது கோபமடைந்து பேசி விட்டால், அதற்காக வருத்தம் தெரிவித்து மீண்டும் நிலைமையை சுமூகமான நிலைக்கு கொண்டு வரவேண்டும். பிரச்னையான நேரங்களில் பிறரால் கேள்விகள் எழுப்பப்படும் போது, சரியான பதிலளித்து, நிலைமை கைமீறிப் போகாத வகையில் பார்த்துக் கொள்ளும் நிர்வாகிகள் சக பணியாளர்களாலும், நிர்வாகத்தாலும் பாராட்டப்படுகின்றனர். அதே சமயம் எனக்குத் தெரியாது எனக்கூறும் பதில்களைவிட இதற்கான பதில்கள் தற்போது இல்லை என்று கூறுவதும், அதிக கேள்விகளை எழுப்பாமல் இருப்பதும் நல்ல பணியாளனுக்கு எடுத்துக்காட்டு. ஒரு நல்ல பணியாளன் தினமும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வமுடையவனாக இருப்பதுடன், மற்றவர்கள் தன்னை எளிதாக புரிந்து கொள்ளும்படியும் நடக்க முயற்சிப்பான். 

9. அலுவலகங்களில் அரசியல், கிசுகிசுக்களைத் தவிர்த்தல்: அலுவலகங்களில் ஒருவருக்கொருவர் காலை வாரிவிடும் அரசியல் செய்தல், ஒருவருக்கொருவர் வதந்தி கிளப்புதல், கிசு கிசுப் பேச்சு பேசுதல் ஆகியவை நடவடிக்கைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது, உங்களுக்கு நல்ல மதிப்பைப்பெற்றுத் தரும். உங்களைப் பற்றி மற்றவர்கள் பேசுவதால் நீங்கள் அவர்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று அர்த்தமல்ல. என்றாலும் உங்கள் நன் மதிப்பை கெடுத்துவிடக் கூடாது ( மறைமுகமாகக் கூட) என்பதற்காக, அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். 

10. வெற்றிக்கு உதவும் உடை பழக்கம்: ஒரு முறை நான் ஒரு கார்பரேட் நிறுவனம் ஒன்றில் புதிதாக பணியில் சேர்ந்த போது, அங்குள்ள ஆடை அணியும் கலாச்சாரத்தை கவனிக்காமல் வழக்கம்போல் தொழிலதிபர்கள் உடுத்தும் கோட்டு, சூட்டுடனே வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். ஆனால் அங்குள்ளவர்கள் என்னை கவனித்து எனது உடை குறித்து பேசிக்கொண்டிருப்பதை நான் கவனிக்கவில்லை. இந்த சூழ் நிலையில் அங்குள்ள ஒருவர் குறையை சுட்டிக்காட்டிய போதுதான் தொழில் நிபுணர்கள் எப்போதும் கோட்டு, சூட்டுடனே இருக்கத் தேவையில்லை என்பதை உணர்ந்தேன். இவ்வளவு நாட்கள் நான் இதே உடையுடன் விலங்குகளுடனா வேலைபார்த்தேன் என வியந்தேன். எனவே சூழ்நிலைக்கேற்ப உடை அணிந்து, டியோடரன்ட் பயன்படுத்தி எப்போதும் சுகாதாரமாக இருப்பது நல்லது. 

11. எப்போதும் நேர்மறையாக இருங்கள்: ஒரு நல்ல பணியாளர் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்பவராகவும், எத்தகைய சவாலையும் சந்திப்பவராகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு காலையிலும் வேலை செய்ய நீங்கள் பயப்படக்கூடாது ( இதை நீங்கள் செய்யும் போது, ஒரு புதிய விண்ணப்பத்துக்கும், ஒரு புதிய வேலை தேடவும் உங்களைத் தயார் படுத்தும்.) இதனால், தினமும் புதிதாக ஒன்றைக் கற்று வளர வாய்ப்பும் நேர்மறையான எண்ணங்களுடன் இயல்பான புன்னகையும் உண்டாகிறது. இதன் மூலம் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் ஊக்குவிக்க முடிகிறது. நல்ல பணியாளருக்கான இத்தகைய பழக்க வழக்கங்களுடன் கூடுதலாக அடி எடுத்து வைக்கும் போது, நல்ல ஊதியத்துடன் இவர்களின் வாழ்வும் உயர்கிறது.EmoticonEmoticon