தமிழ்நாடு அரசு,
தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம்,,
கிண்டி, சென்னைப் பிரிவு,
சென்னை-32,
Ministry of Labor and Employment (MoLE)
National Institute of Career Service,
Guindy, Chennai-32,
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயிற்சிகள்,
14-இல் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் பயிற்சி
மாற்றுத் திறனாளிகளுக்கு செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் தொடர்பான இலவச பயிற்சி மே 14-ஆம் தேதி சென்னை கிண்டியில் நடைபெறுகிறது.மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தின் சென்னைப் பிரிவு சார்பில், குறுகியகால இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. உடல்திறன் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் கேட்கும் திறனற்றவர்களுக்கு .
இலவச பயிற்சிகள்
- செல்லிடப்பேசி பழுதுபார்த்தல்,
- தையல் கலை,
- வீட்டு உபகரணங்கள்,
- ஸ்கிரீன் பிரிண்டிங்,
- புக் பைண்டிங்,
- சில்லறை விற்பனைப் பிரிவு ,
செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் பயிற்சி:
தேர்வர்கள்:
செல்லிடப்பேசி பழுதுபார்த்தல் பயிற்சிக்கு உடல் குறைபாடு உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வயது
15 முதல் 35 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு இந்த பயிற்சி வரும் 14-ஆம் தேதி அளிக்கப்படும்.
கல்வித் தகுதி
12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.டி.ஐ., பட்டயப் படிப்பு படித்தவர்கள் இதில் பங்கேற்கலாம்.
பயிற்சி வழங்கும் இடம்
இந்தப் பயிற்சி சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தில் நடைபெறும்.
மே 17-இல்
சில்லறை விற்பனைப் பிரிவு பயிற்சி:
சில்லறை விற்பனைப் பிரிவுப் பயிற்சியில் மாற்றுத் திறனாளிகளும், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம்.
வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை.
கல்வித் தகுதி
8- ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.
பயிற்சி வழங்கும் இடம்
இவர்கள் மே 17-ஆம் தேதி சாந்தோம் ஹெல்ப் டிரஸ்ட் அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்கலாம்.
விண்ணப்பதார்ரகள் கவனத்திற்கு
குறைந்த அளவு இடங்கள் மற்றும் விடுதி வசதி உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் மே 14-க்கு முன்பாக மையத்தை அணுகலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
EmoticonEmoticon