General Knowledge Question and Answer with Explanation-3- tnjobstoday


Current Affairs for Competitive Examination-2018,
TNPSC,TRB/TET/SLET ,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுவாரிய அனைத்து தேர்வுகள்,
ஆசிரியர் தேர்வு வாரிய அனைத்து தேர்வுகள்,

இந்திய இரயில்வே தேர்வுகள்,
வங்கி பணிகள் தொடர்பான தேர்வுகள்

1. ஓம் என்ற சொல் எந்த வேதத்தில் இடம் பெற்றுள்ளது?
1. ரிக் வேதம்
2. யஜீர் வேதம்
3. சாம வேதம்
4. அதர்வன வேதம்
விடை: 1.ரிக்
விளக்கம்: உலகின் பழமையான சமய நூல் ரிக் வேதம். பாடல்களின் எண்ணிக்கை 1028. சூரியனை வழிபடும் காயத்திரி மந்திரம் இதில்தான் உள்ளது. அக்னி என்ற சொல் ரிக் வேதத்தின் துவக்க சொல்லாகும்.


2. சித்தார்த்தர் என்று அழைக்கப்பெற்றவர் யார்?
1. புத்தர்
2. மகாவீரர்
3. ஜொராஸ்டரர்
4. ஆனந்தா

விடை:1. புத்தர்
விளக்கம்: கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். புத்தர் என்ற சொல்லுக்கு ஞானஒளி பெற்றவர் என்று பெயர். இயற்பெயர் சித்தார்த்தர், தந்தை கபிலவஸ்து, தாய் மாயாதேவி.


3. விற்பனை வரியை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?
1. சாணக்கியர்
2. விசாகதத்தர்
3. கனிஷ்கர்
4. நாகார்ஜீனர்

விடை: 1. சாணக்கியர்
விளக்கம்: சாணக்கியரின் பூர்விகம் கேரளா. வேறுபெயர் கெளடில்யர், விஷ்ணு குப்தர். இவர் எழுதிய நூல் அர்த்த சாஸ்திரம். சமுத்திர குப்தர். பிந்துசாரர் ஆகியோரிடம் முதன்மை அமைச்சராக பணியாற்றினார்.


4. அக்பரின் சாமதி எங்கு உள்ளது? 
1. சிக்கந்தாரா 
2. தோல்பூர் 
3. பிரோசாபாத் 
4. பரத்பூர் 

விடை:1. சிக்கந்தாரா 
விளக்கம்: அக்பர் அக்டோபர் 15, 1542 இப்போதைய பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள அமர்கோட் ராஜபுதனக் கோட்டையில் பிறந்தார். முகலாயர்களின் வருவாய் நிர்வாகத்தை தோற்றுவித்தவர், விதவை மறுமணத்தை ஆதரித்தார், உடன்கட்டை ஏறுவதை தடுத்து நிறுத்தினர்.  


5. ரத்த அணுக்களில் மிகச்சிறியது? 
1. வெள்ளை அணுக்கள் 
2. சிவப்பு அணுக்கள் 
3. தட்டை அணுக்கள் 
விடை:3. தட்டை அணுக்கள் 
விளக்கம்: ரத்த அணுக்கள் தோற்றுவிக்கப்படும் இடம் எலும்பு மஜ்ஜை. ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் காணப்படுகின்றன. அவை வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள் மற்றும் தட்டை அணுக்கள். இதில் மிகச்சிறியவை தட்டை அணுக்கள்.


6. உட்கரு மணியை கண்டறிந்தவர் யார்? 
1. ஃபாண்டனா 
2. பிர்கிஞ்சி 
3. மோல் 
4. ராபர்ட் ப்ரெளன் 
விடை: ஃபாண்டனா 
விளக்கம்: உடல் வடிவத்தை தீர்மானிப்பது உட்கருச் சாறு, உட்கருச் சவ்வு, உட்கரு மணி (நியூக்கிளியோலஸ்), குரோமோட்டின் வலைப்பின்னல் கொண்டது. இது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபுப் பண்புகளை எடுத்துச் செல்லும் பண்புடையது.


7. பொருளியலின் தந்தை எனப்படுபவர் யார்? 
1. J.M. கீன்ஸ் 
2. ஆடம் ஸ்மித் 
3. மாஸ்தஸ் 
4. டேவிட் ரிக்கார்டோ 

விடை: 2.ஆடம் ஸ்மித் 
விளக்கம்: ஆடம் ஸ்மித் (1723-90) தன்னிச்சனையாக இயங்கும் சந்தை பொருளாதாரத்தில் பகுத்தறிவுடன் கூடிய சுயநலம் கொண்டு இயங்கும் தனிநபர்களால் பொருளாதார நன்மை ஏற்படும் என்று உணர்த்தியவர். பொருளியலை ஒரு தனி இயலாக நாம் இன்று பயில்வதற்கு அடிப்படை 1776-ல் அவர் வெளியிட்ட ‘An Inquiry into the Nature and Causes of Wealth of Nations' என்ற புத்தகமும் ஒரு காரணம்.


8. சமூக முன்னேற்ற திட்டம் (CDP) தொடங்கப்பட்ட ஆண்டு எது? 
1. 1952 
2. 1955 
3. 1960 
4. 1899 

விடை:  1.1952 
விளக்கம்: மக்கள் பங்கேற்புடன், கிராம புறங்களை அனைத்து வகையிலும் முன்னேற செய்ய தொடங்கப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் இந்த சமூக முன்னேற்ற திட்டம்.


9. தென்னிந்திய அளவில் தொடங்கப்பட்ட முதல் தோல் வங்கி அமைந்துள்ள இடம் எது? 
1. கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 
2. கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 
3. திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 
4. மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 

விடை: 1.கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 
விளக்கம்: தென்னிந்திய அளவில் முதன்முறையாக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு உறுப்புதான ஆணையம், தேசிய உறுப்பு-திசு மாற்றுதல் அமைப்பு ஆகியவை இணைந்து ரூ. 1 கோடி மதிப்பில் தோல் வங்கியை தொடங்கியுள்ளது.


10. ஆக்ஸ்போர்டு அகராதியில் 2017 ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட ஹிந்தி வார்த்தை எது? 
1. ஆதார் 
2. யாத்ரா 
3. நிஷான் 
4. அம்ரித் 

விடை:1. ஆதார் 
விளக்கம்: ஆண்டு தோறும் புதிய வார்த்தைகள் தெரிவு செய்யப்பட்டு ஆக்ஸ்போர்டு அகராதியில் இணைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2017 ஆம் ஆண்டுக்கான ஹிந்தி வார்த்தையாக ஆதார் தேர்வு செய்யப்பட்டுள்ளது.EmoticonEmoticon