Current Affairs for Competitive Examination-2018 | 05-04-2018-Free Download இன்றைய நடப்பு நிகழ்வுகள்


Current Affairs for Competitive Examination-2018
TNPSC,TRB/TET/SLET


கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் போட்டியில் இந்தியா முதல் பதக்கத்தை கைப்பற்றியது.
ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று காமன்வெல்த் போட்டிகள் துவங்கின. இதில் ஆண்களுக்கான 56 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் குருராஜா வெள்ளி பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கப்பதக்கம் வென்று அசத்தல்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மிராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் தொடரில் மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவு போட்டி நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே எடையை தூக்கிய மிராபாய் சானு, ஸ்னேட்ச் மற்றும் கிலீன் (Clean & Jerk ) ஆகிய இரண்டு பிரிவுகளையும் சேர்த்து மொத்தம்
196 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.


48 கிலோ எடைப் பிரிவிற்கான பளு தூக்கும் போட்டியில் இந்திய வீராங்கனையான சஞ்சிதா குமுக்ச்சம் தங்கம் வென்றார். ஆண்கள் பளூதூக்கும் போட்டியின் 56 கிலோ பிரிவில் இந்தியவீரர் சுகென் தேய், தங்கம் வென்றார். இதே பிரிவில் இந்திய வீரர் கணேஷ் மாலி,
வெண்கலம் வென்றார்.


ஜூடோ போட்டியில் இந்திய வீராங்கனையான சுசீலா லிக்மபம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதே போல் ஆண்களுக்கான ஜூடோ போட்டியில் 60 கிலோ பிரிவில் இந்தியாவின் நவ்ஜோத் சனா வெள்ளிப்பதக்கம் வென்றார். ஜூடோ போட்டிகளில் 2 பதக்கங்கள் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது.


எஃகு உற்பத்தியில் இந்தியா அபாரம்: ஜப்பானை பின்னுக்கு தள்ளியது
எஃகு உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளிவிட்டு உலகின் இரண்டாவது மிகப்பெரிய எஃகு உற்பத்தி செய்யும் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இது தொடர்பாக (Sufi) எனப்படும் இந்திய எஃகு பயனாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த ஏப்ரல் 2017-ம் ஆண்டு முதல் பிப்ரவரி 2018-ம் ஆண்டு வரையிலான காலத்தில் இந்தியா 93.11 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்துள்ளது. இது கடந்த ஏப்ரல் 2016-ம் ஆண்டு முதல் பிப்ரவரி 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.4. சதவீதம் அதிகம் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதே போன்று உலக எஃகு உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி வரை இந்தியா 8.4 மில்லியன் டன் எஃக்கு உற்பத்தி செய்துள்ளது. இது கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் 3.4 சதவீதம் அதிகமாகும்.தற்போது எஃகு உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. முன்னர் இரண்டாமிடத்தில் உள்ள ஜப்பானை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 


இலவச, 'அம்மா வை பை' சேவை இன்று துவக்கம்
தமிழகத்தின், ஐந்து இடங்களில், இலவச, 'அம்மா வை பை' வசதி, இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.'தமிழகத்தில், முக்கிய பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களில், வை பை என்ற, கம்பியில்லா இணையதள சேவை வழங்கப்படும்' என, முன்னாள் முதல்வர், ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதன்படி, முதற்கட்டமாக, 50 இடங்களில், இலவச, 'வை பை' சேவையை, செயல்படுத்த, தமிழ் நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக இன்று, ஐந்து இடங்களில், வை பை சேவை, செயல்பாட்டிற்கு வருகிறது. இது குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:இலவச, 'அம்மா வை பை' சேவை, சென்னை, மெரினா உழைப்பாளர் சிலை, மதுரை, திருச்சி, சேலம், கோவை ஆகிய பஸ் நிலையங்கள் என, ஐந்து இடங்களில், இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. முதல், 20 நிமிடங்கள் இந்த சேவையை, இலவசமாக பயன்படுத்தலாம். அதன் பின், ஒரு மணி நேரத்துக்கு, 10 ரூபாய் வீதம், இரண்டு மணி நேரம் இந்த சேவையை தொடர முடியும்.வை பை ஆன் செய்ததும், ஒரு திரை தோன்றும், அதில், பெயர், மொபைல் நம்பர், இ மெயில் முகவரியை பதிவு செய்ததும், நம்பருக்கு, ரகசிய எண் வரும். அந்த ரகசிய எண்ணை பதிவு செய்து, வை பை சேவையை பயன்படுத்தலாம். 20 நிமிடங்கள் முடிந்ததும், வை பை இணைப்பு, தானாக துண்டிக்கப்படும். அதன் பின், கட்டணம் செலுத்தி, சேவை பெறலாம். கட்டணத்தை, 'நெட் பேங்கிங்' வழியாகவும், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்தியும் செலுத்தலாம்.


தமிழ்செம்மல் விருது
தமிழகத்தில், 2016 மற்றும், 2017ம் ஆண்டுக்கு, 'தமிழ் செம்மல் விருது' பெறும், 64 பேரை, முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.தமிழகத்தில், தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடு படுவோரைக் கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்த, மாவட்டத்திற்கு ஒருவர் வீதம், 32 பேருக்கு, 'தமிழ் செம்மல் விருது' வழங்கப்படும் என, 2014 ஜூலை, 25ல், சட்டசபையில், 110 விதியின் கீழ், ஜெ., அறிவித்தார்.அதன்படி, 2015ம் ஆண்டுக்கான விருதுகள், 2017 ஏப்., 25ல் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, 2016 மற்றும், 2017ம் ஆண்டிற்கான விருது பெறுவோர் பெயர்களை, நேற்று முதல்வர், பழனிசாமி அறிவித்தார். அவர்களுக்கு, இன்று(05-04-2018) சென்னை, தலைமைச் செயலகத்தில், விருது வழங்கப்பட உள்ளது.



சிகரெட் அட்டையில் தொலைபேசி எண் மத்திய சுகாதார துறை உத்தரவு
'சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் அட்டையில், கட்டணமில்லா தொலைபேசி 1800 - 11 - 2356 எண்ணை அச்சிட வேண்டும்' என, மத்திய சுகாதார 
துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. புகையிலை பொருட்களின் அட்டையில் வெளியிட வேண்டிய புகைப்படங்கள், எச்சரிக்கை வாசகங்கள் 
தொடர்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, மத்திய சுகாதாரத்துறை அறிவிக்கை வெளியிடுகிறது. இதன்படி, 2018 மற்றும், 2019ஆண்டுகளுக்கான 
அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

Previous G.K

ரூபஸ்ரீ' திருமண திட்டம் துவக்கி வைத்தார் மம்தா

மேற்கு வங்கத்தில், ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கும், 'ரூபஸ்ரீ' திட்டத்தை, முதல்வர் மம்தா பானர்ஜி, துவக்கி வைத்தார். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஏழை சிறுமியரின் கல்விக்கு உதவும், கன்யாஸ்ரீ என்ற திட்டத்தை, முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் துவங்கினார்.ஏழை சிறுமியரின், 18 வயதிற்குள்ளாகவே திருமணம் நடப்பதை தடுக்கவும், அவர்களுக்கு கல்வி அறிவு கிடைக்க வகை செய்யவும், இத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது.

1.   ஏழைச் சிறுமியரின் கல்விக்காக, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
2.   பின், ஆண்டுக்கு, 500 ரூபாய், உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

3.   18 வயது பூர்த்தியான, ஏழைப் பெண்களுக்கு, திருமண உதவித் தொகையாக, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

4.   இந்த உதவித் தொகையை பெற, கல்வி தகுதி எதுவும் கிடையாது.

5.   ஆண்டுக்கு, 1.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் ஈட்டும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள்,

6.   இந்த உதவித் தொகையை பெற, விண்ணப்பிக்கலாம்.

7.   விண்ணப்ப படிவங்களை, நகராட்சி அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அதிகாரி அலுவலகங்கள் மற்றும் துணை மண்டல அதிகாரி அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.


டிபெக்ஸ்போ - 2018' ராணுவ கண்காட்சி
'டிபெக்ஸ்போ - 2018' என்ற பெயரில் நடைபெற உள்ள ராணுவ கண்காட்சிக்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.கடற்படை, ராணுவம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவுகளின், தளவாடங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் குறித்த கண்காட்சியை, பாதுகாப்புத்துறை ஆண்டுதோறும் நடத்துகிறது; கடந்த ஆண்டு, கோவா மாநிலத்தில் நடந்தது.இந்த முறை, தமிழகத்தில் முதல்முறையாகநடத்தப்பட உள்ளது. இதற்காக, சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தை ஒட்டியுள்ள, திருவிடந்தை பகுதியில், 450 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இம்மாதம், 11 - 14ல் நடைபெற உள்ள கண்காட்சியில், ராணுவ தளவாடங்கள், போர் கப்பல்கள், தளவாட தயாரிப்பு நிறுவனங்களின் அரங்குகள் இடம்பெறும். இதில், 80 நாடுகளின், 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
67 ஏக்கர் : இதற்கான பணியை, ராணுவத்தின் ஒரு துணை அமைப்பான, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம், 67 ஏக்கரில், அரங்க கூடங்கள் மற்றும் பிற ஏற்பாடுகளை செய்து வருகிறது.அரங்கங்கள், 500 இடம்பெறும் வகையில், எட்டு பெரிய கூடங்கள், துவக்க விழா அரங்கம், வளாக மின் இணைப்பு, தகவல் தொடர்பு, இணைய தொடர்பு, பாதைகளை அமைத்து வருகிறது.கண்காட்சி வளாகத்தின் எதிர்புறம், கடலில் போர்க்கப்பல் நிகழ்த்தும் சாகசத்தை காண, கரையில் மிகப் பெரிய மேடை, ஹெலிகாப்டர்கள் வந்திறங்கும் தளங்கள் அமைக்கப்படுகின்றன.பிரதமர், ராணுவ அமைச்சர், முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, டி.ஜி.பி., ராஜேந்திரன் உள்ளிட்ட காவல் துறையினருடன் அவ்வப்போது ஆலோசிக்கப்படுகிறது.அவசர மருத்துவ தேவைகளுக்காக, மூன்று மருத்துவர்கள் குழு, நான்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள், அத்தியாவசிய மருந்துகளுடன், 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவ அரங்கம் அமைக்கப்படுகிறது.அந்த வளாகத்தில் இப்போதே பாதுகாப்பு கெடுபிடிகள் துவங்கி விட்டன. வெளிநபர்கள் நுழையாமல் தடுக்க, பல மாவட்ட போலீசார் கண்காணிக்கின்றனர்.வளாகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் அடையாள அட்டையை பரிசோதித்த பிறகே அனுமதிக்கின்றனர்.வேகத் தடைகள், கன ரக, நீள வாகனங்கள், கிரேன்கள் அதிகம் வரும் நிலையில், இப்பகுதியை கடக்கும் பிற வாகனங்களின் வேகத்தை குறைக்க, கிழக்கு கடற்கரை சாலையில், தற்காலிக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி நடைபெறும் நாட்களில், கிழக்கு கடற்கரை சாலை போக்குவரத்து, கேளம்பாக்கம் வழியாக மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.கண்காட்சி நாட்களில் பொதுமக்களுக்கு அனுமதி இருக்காது என்றும், கடைசி நாளான, 14ல் மட்டும், சிறப்பு அனுமதியின் படி அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிகிறது.

இஸ்ரோவுடன் ஜிசாட் - 6ஏ செயற்கைக்கோள் தகவல் துண்டிப்பு
விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட் - 6ஏ 
செயற்கைக்கோள் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துடன் திடீரென தகவல் துண்டிப்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்யும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 ஜிசாட் - 6ஏ செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி - எஃப்8 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மைய ஏவுதளத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.
 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளானது 10 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. பன்முனை எஸ்-பாண்ட், ஒருமுனை சி-பாண்ட் அலைவரிசைகள் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள இந்தச் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது.
 எளிதில் அணுக முடியாத கிராமப்புறப் பகுதிகளில் செல்லிடப்பேசிகளின் தகவல்தொடர்பை மேம்படுத்தும் வகையில் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது. ஏற்கெனவே, செயல்பாட்டில் இருக்கும் ஜிசாட் - 6 செயற்கைக்கோளுடன் இணைந்து, மேம்பட்ட தகவல்தொடர்புக்குப் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.
 இஸ்ரோவின் தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த சிவன் பொறுப்பேற்றதும், செலுத்தப்பட்ட முதல் செயற்கைக்கோள் என்ற சிறப்பையும் இது பெற்றிருந்ததது.
 தகவல் துண்டிப்பு: இந்நிலையில் விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை, ஜிசாட் - 6ஏ செயற்கைக்கோள் மற்றும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
 செயற்கைக்கோளானது இரண்டாவது சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட நிலையான இறுதியான மூன்றாவது நிலை சுற்றுவட்டப்பாதையில் ஏப்.1-ஆம் தேதி நிலை நிறுத்தும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை செயற்கைக்கோளிடம் இருந்து எந்தவித சமிக்ஞையும் வராததால், அதனிடம் இருந்து தகவல் துண்டிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து செயற்கைக்கோள் குறித்த பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கின.
 பாதிப்பு: மின்சக்தி அமைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கால்நடைப் பல்கலைக் கழக துணைவேந்தராக பாலசந்திரன் நியமனம்
சென்னையில் உள்ள  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக துணை வேந்தராக சி.பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆளுநர் அலுவலகம்  ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட பாலசந்திரன் மூன்றாண்டுகளுக்கு துணைவேந்தர் பதவியில் இருப்பார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாலசந்திரன் ஏற்கெனவே தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக பதிவாளர்,  சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர்(டீன்) ஆகிய பொறுப்புகளில் பணிபுரிந்தவர் ஆவார். பேராசிரியராக 21 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். 6 நூல்களை எழுதியுள்ள இவர் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் 9 பேருக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.


கார்கள் இனி நம்பர் பிளேட்டுடன் விற்பனைக்கு வரும்
கார்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விரைவில் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
 தற்போது நான்கு சக்கர வாகனங்களின் உரிம எண்கள் அடங்கிய நம்பர் பிளேட்டுகளை பல்வேறு மாநிலங்களும் அங்கீகாரமளிக்கப்பட்ட அமைப்புகளிடம் இருந்து கொள்முதல் செய்கின்றன. நம்பர் பிளேட்டுகளில் இடம்பெற வேண்டிய எண்களை ஆர்டிஓ எனப்படும் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் வழங்குகின்றன.
 இந்நிலையில், நம்பர் பிளேட் நடைமுறை தொடர்பாக மத்திய அரசு முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பிடிஐ செய்தியாளரிடம் மேலும் கூறியது:
 கார்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விரைவில் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும். நம்பர் பிளேட்டுகளின் விலையும் வாகனங்களின் விலையில் சேர்க்கப்படும். வாகனங்களின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களே அவற்றில் நம்பர் பிளேட்டுகளைப் பொருத்தி விடும். அவற்றில் எண்களைப் பொறிக்கும் பணி பின்னர் இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
 நம்பர் பிளேட்டுகளின் விலை வாகனத்தின் விலையில் சேர்க்கப்படும். இந்தப் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய நம்பர் பிளேட்டுகளால் நுகர்வோருக்கு ஆறுதல் கிடைப்பதோடு, நம்பர் பிளேட்டுகளில் சமச்சீரான தன்மையும் ஏற்படும். தற்போது மாநிலங்கள் கொள்முதல் செய்யும் நம்பர் பிளேட்டுகளின் விலை ரூ.800 முதல் ரூ.40,000 வரை உள்ளது.
 வாகனங்களின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, விலை குறைந்த வாகனங்களாக இருந்தாலும், ஆடம்பர வாகனங்களாகவும் இருந்தாலும் பாதுகாப்பு அம்சங்களில் எந்த சமரசமும் செய்து கொள்ளப்படாது. பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும். அதேபோல், வாகனங்களால் ஏற்படும் மாசைக் கட்டுப்படுத்தும் விஷயத்திலும் சமரசத்துக்கு இடமில்லை. மாசுக் கட்டுப்பாடு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளஎன்றார் அவர்.
 அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பிறகு தயாரிக்கப்படும் கார்களில் ஓட்டுநர்களின் பாதுகாப்புக்காக காற்றுப்பைகள் (பலூன்கள்), சீட்-பெல்ட் அணிய வேண்டியதை நினைவுபடுத்தும் கருவி, மணிக்கு 80 கி.மீ. வேகத்தைத் தாண்டி வாகனத்தை ஓட்டினால் எச்சரிக்கும் கருவி போன்றவற்றைப் பொருத்த வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் கோப்பை கால்பந்து: வாகை சூடியது கேரளம்
சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் பெங்கால் அணியை வென்று கேரள அணி சாம்பியன் ஆனது. 2004-05 ஆண்டுக்குப் பிறகு கேரள அணி சந்தோஷ் கோப்பை வெல்வது இது முதல் முறையாகும். முன்னதாக, கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க நடத்தப்பட்ட பெனால்டி ஷூட் வாய்ப்பில் கேரளம் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
 முன்னதாக, விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பு கேரள அணிக்கு கிடைத்தது. ஆட்டத்தின் 19-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் ஜிதின் எம்.எஸ். கோலடித்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் பெங்காலுக்கு கோல் வாய்ப்பு வழக்காத கேரளத்தின் தடுப்பாட்டம் பலமாக இருக்க, முதல் பாதி முடிவில் கேரளம் 1-0 என முன்னிலையில் இருந்தது.

 பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணியின் கைகளும் ஓங்கியிருக்க, 68-ஆவது நிமிடத்தில் ஆட்டத்தை சமன் செய்தது பெங்கால். அந்த அணியின் கோலை ஜிதென் முர்மு அடித்தார். இந்நிலையில், நேரம் முடிவடைய ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.  இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டு, ஆட்டம் தொடர்ந்தது. 117-ஆவது நிமிடத்தில் விபின் தாமஸ் தலையால் முட்டி கோலடிக்க, கேரளம் 2-1 என முன்நிலை பெற்றது. விடாமல் போராடிய பெங்காலுக்கும் கோல் வாய்ப்பு கிடைக்க, மீண்டும் ஆட்டம் 2-2 என சமன் ஆனது. இறுதியில் டை பிரேக்கரில் கேரளம் 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

 பெனால்டி வாய்ப்பில் பெங்கால் அணியில் அங்கித் முகர்ஜி மற்றும் நாபி ஹுசைன் ஆகியோர் அடித்த முதல் இரு பந்துகளை கேரள கோல் கீப்பர் மிதுன் அற்புதமாக தடுத்தார். கேரள அணியில் ராகுல் ராஜ், ஜிதின் கோபாலன், ஜஸ்டின் ஜார்ஜ், சீசான் ஆகியோர் கோலடித்தனர். இதில் கேரள அணியின் வெற்றிக்கான கோலை சீசான் முர்மு அடித்தார்.  6-ஆவது முறையாக சந்தோஷ் கோப்பை பட்டம் வென்ற கேரளம், கடைசியாக 2004-ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற சந்தோஷ் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாபை வீழ்த்தி சாம்பியன் ஆகியிருந்தது.


மியாமி ஓபன்: ஸ்லோன் ஸ்டீபன்ஸ் சாம்பியன்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் சாம்பியன் ஆனார். அவர் மியாமி ஓபன் பட்டம் வெல்வது இது முதல் முறையாகும்.
 முன்னதாக நடைபெற்ற இறுதிச்சுற்றில், போட்டித் தரவரிசையில் 13-ஆவது இடத்தில் இருந்த ஸ்டீபன்ஸýம், போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருந்த லாத்வியாவின் ஜெலினா ஒஸ்டாபென்கோவும் மோதினர். இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக ஒரு மணி 32 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் ஸ்டீபன்ஸ் 7-6(7/5), 6-1 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.
 அமெரிக்க ஓபன் நடப்பு சாம்பியனான ஸ்டீபன்ஸ், தற்போது உலகின் 12-ஆம் நிலை வீராங்கனையாக உள்ளார். இந்த வெற்றியை அடுத்து, திங்கள்கிழமை வெளியாகும் புதிய தரவரிசையின்போது அவர் முதல் 10 இடங்களுக்குள்ளாக முன்னேறுவார். ஸ்டீபன்ஸ் இத்தகைய இடத்துக்கு வருவது இது முதல் முறையாகும்.
 வெற்றிக்குப் பிறகு ஸ்டீபன்ஸ் கூறியதாவது:
 ஜெலினாவுக்கு எதிரான இறுதிச்சுற்று கடினமானதாக இருக்கும் என்று அறிந்திருந்தேன். ஆட்டத்தின் தொடக்கத்தில் சற்று தடுமாறினேன். ஆனால் முதல் செட்டை கைப்பற்றிய பிறகு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்தது. தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள்ளாக வருவது நீண்டநாள் கனவு.
 ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்குப் பிறகு காயம் காரணமாக செய்துகொண்ட அறுவைச் சிகிச்சையால் சற்று பின்னடைவை சந்தித்தாலும், அதைத் தொடர்ந்து வந்த வாய்ப்புகள் நான் மீண்டு வருவதற்கு உதவின என்று ஸ்டீபன்ஸ் கூறினார்.
 இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட உலகின் 5-ஆம் நிலை வீராங்கனை ஜெலினா, 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு மியாமி ஓபனுக்கு முன்னேறியே இளம் வயது வீராங்கனை (20) என்ற பெருமையை பெற்றிருந்தார். முன்னதாக அந்த ஆண்டில் பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா (21) இதேபோன்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
 தோல்விக்குப் பிறகு பேசிய ஜெலினா கூறுகையில், "இறுதிச்சுற்றில், தேவையில்லாதபோதும் நான் ஆக்ரோஷமாக ஆடினேன் என்றாலும், தொடக்கத்தில் அது உதவிகரமாக இருந்தது. பின்னர் எனக்கான நெருக்கடி அதிகரித்ததுடன், ஷாட்களையும் தவறவிட்டதால் தோல்வியடைந்தேன்.
 தற்போது பிரெஞ்சு ஓபன் போட்டிக்கு செல்லும் முன்பாக களிமண் தரையில் பயிற்சி பெற போதிய அவகாசம் உள்ளதால் அதற்கு சிறப்பாகத் தயாராக உள்ளேன்' என்றார்.

 பிரையன் சகோதரர்கள் வெற்றி
 மியாமி ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் அமெரிக்க சகோதரர்களான மைக் பிரையன்-பாப் பிரையன் ஜோடி பட்டம் வென்றது. இறுதிச்சுற்றில் பிரயன் சகோதரர்கள் 4-6, 7-6(7/5), 10-4 என்ற செட்களில் ரஷியாவின் ஆன்ட்ரு ருபலேவ்-காரென் காசானோவ் இணையை வீழ்த்தியது.










EmoticonEmoticon