Current Affairs for Competitive Examination-2018 | 12-04-2018-Free Download இன்றைய நடப்பு நிகழ்வுகள்

Current Affairs for Competitive Examination-2018,TNPSC,TRB/TET/SLETஇந்தியா - ஜாம்பியா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்து
  ஜாம்பியாவில் புதன்கிழமை நடைபெற்ற இரு நாட்டு வர்த்தக கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். உடன், அந்நாட்டு அதிபர் எட்கர் சங்வா லூங்கூ உள்ளிட்டோர்.இந்தியா - ஜாம்பியா இடையே 4 முக்கிய ஒப்பந்தங்கள் புதன்கிழமை கையெழுத்தாகின. இரு நாடுகளுக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தியாவிலும், ஜாம்பியாவிலும் பரஸ்பரம் வசிக்கும் இரு நாட்டவர்களுக்கும் இரட்டை வரி விதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒப்பந்தம் அவற்றில் ஒன்று. அதேபோன்று நீதித் துறை சார்ந்த ஒத்துழைப்புகளை நல்குவது இரண்டாவது ஒப்பந்தமாகும். அடுத்ததாக, இரு நாட்டு பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை ரத்து செய்வது தொடர்பான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. நான்காவதாக, ஜாம்பியாவில் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தை இந்தியா அமைப்பது குறித்த உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் இணையதளம் மூலம் மாற்றுச் சான்றிதழ் பெறலாம்: அமைச்சர் தகவல்

தமிழக மாணவ, மாணவிகள் வரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் எந்த ஒரு போட்டித் தேர்வுகள், திறனறித் தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கரூர் ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த ஆங்கில வழி பயிலும் மாணவ, மாணவிகள் 220 பேருக்கு ஈரோட்டில் மே 5-ஆம் தேதி வரை 21 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி முகாம்களில் பங்குபெறும் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது, சுமார் 412 பயிற்சி மையங்களில் பயிலும் 9,000 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படும். இப்பயிற்சியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் பங்கேற்கின்றனர். இனிவரும் காலங்களில் மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவரவர் பயிலும் பள்ளியில் இருந்தவாறே தலைமையாசியர்கள், ஆசிரியர்கள் உதவியுடன் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் கல்வியில் மட்டும் கவனம் செலுத்த 
உயர்நிலைக் கல்வி பயிலும் ஏழை, எளிய மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ரூ. 10,000, மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 15,000 கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் தங்கள் மாற்றுச் சான்றிதழ்களை நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் இணையதளம் மூலம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.இதையடுத்து, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், அரசின் நலத்திட்டங்கள் குறித்துப் பேசினார். இதில், 
ஈரோடு மக்களவை உறுப்பினர் எஸ்.செல்வகுமார சின்னையன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு), தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் (பெருந்துறை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்திய கடலோரக் காவல் படையில் இணைந்தது புதிய ரோந்துக் கப்பல் 'ஐ.சி.ஜி.எஸ். விக்ரம்'
இந்திய கடலோரக் காவல்படை இயக்குனர் ராஜேந்திர சிங் தலைமையில் நடைபெற்ற விழாவில், பாதுகாப்புத் துறை அமைச்சர் சுபாஷ் ராம்ராவ் பாம்ரே சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட்டதற்கான சான்றிதழை அவர் கப்பலின் கேப்டன் கமல் 
சின்ஹாவிடம் வழங்கினார். பின்னர் கப்பலின் பெயர் பலகையை திறந்து வைத்த அமைச்சர், அதனை கட்டமைத்த எல் அண்ட் டி குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.நிகழ்ச்சியில், கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய தளபதி ராஜன் பர்கோத்ரா, எல் அண்ட் டி நிறுவன இயக்குநர்கள் கண்ணன், பாட்டி, பொது மேலாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்திய கடலோரக் காவல்படையில் தற்போது 134 ரோந்து கப்பல்கள் மற்றும் இடைமறிக்கும் படகுகள், 62 ரோந்து விமானங்கள் உள்ளன. மேலும் 63 புதிய ரோந்துக் கப்பல்கள், படகுகள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. ரூ.1,400 கோடி மதிப்பீட்டில் 7 அதிநவீன கப்பல்கள் எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்தில் கட்ட பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.இதில் முதல் கப்பல் தற்போது படையில் இணைக்கப்பட்டுள்ளது. இக்கப்பலில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், உபகரணங்கள் உள்ளிட்டவை சுமார் 70 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. கப்பலின் இயந்திரம் ஜெர்மனியில் இருந்தும், புரப்பல்லர் நெதர்லாந்தில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டவையாகும். இக்கப்பல் பல்வேறு அதி நவீன கண்காணிப்பு, தொலைத்தொடர்பு, ஆயுதங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மூலம் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடல் எல்லைப் பகுதியில் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள இயலும். மேலும், புயல் உள்ளிட்ட ஆபத்து காலங்களில் மீட்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எண்ணெய்க் கசிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள இக்கப்பல் ஏதுவாக அமைந்துள்ளது.கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட்ட இக்கப்பல் மேற்கு பிராந்திய பிரிவில் சேர்க்கப்பட்டு புதிய மங்களூரை தலைமையிடமாகக் கொண்டு, கேப்டன் கமல் சின்ஹா தலைமையில் 14 அதிகாரிகள், 88 வீரர்களுடன் ரோந்துப் பணியில் தொடர்ந்து ஈடுபடும். மேலும் புதிய கப்பல்கள் படிப்படியாக பணியில் இணைக்கப்படும் என்றார் அவர். வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1' செயற்கைக்கோள்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதிஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை அதிகாலை 4.04 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி41 ராக்கெட் மூலம், 1,425 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைக்கோள் இஸ்ரோவால் விண்ணில் செலுத்தப்பட்டது. பி.எஸ்.எல்.வி.-சி41 ராக்கெட் மூலம் 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1' செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான   'கவுன்ட்-டவுன்' செவ்வாய்க்கிழமை இரவு 8.04 மணிக்கு தொடங்கியது. இதனையடுத்து இன்று அதிகாலை 4.04 மணிக்கு  'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1   இஸ்ரோ  விஞ்ஞானிகளால் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. பயன் என்ன: கப்பல்கள், விமானங்கள், வாகனங்கள் அனைத்து வகையான போக்குவரத்தையும் துல்லியமாகக் கணித்து வழிகாட்டும் வகையில் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டு வரும் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோள் வரிசையில்  9-வதாக  'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1' செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது.பேஸ்புக்குக்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகமாகியுள்ள புதிய ஆப்: 
லகின் பிரபல சமூகவலைதளமாக இருப்பது பேஸ்புக் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் இதனைப்  பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக சமீபத்தில் பெரும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் எழுத்துப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில்தான் பேஸ்புக்குக்கு போட்டியாக "ஹலோ" என்னும் புதிய செயலி இந்தியாவில் புதனன்று அறிமுகமாகியுள்ளது. உலகின் முதல் பரவலான சமூக வலைதளமாக அறிமுகமானது கூகுளின் 'ஆர்குட்.காம் '. கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பொறியாளரான ஆர்குட் பையுகோக்டன் என்பவர் இதனை உருவாக்கினார். அவர் பெயராலேயே இது அழைக்கப்பட்டு வந்தது. பரவலான கவனம் பெற்று வந்த ஆர்குட் சேவையானது பேஸ்புக் வருகைக்கு பிறகு புகழ் மங்கத் துவங்கியது. படிப்படியாக வரவேற்பினை இழந்த ஆர்குட் சேவையை 30.09.2014 அன்று கூகுள் நிறுத்திக் கொண்டது. தற்பொழுது இதே ஆர்குட் பையுகோக்டன்தான் பேஸ்புக்குக்கு போட்டியாக "ஹலோ" என்னும் புதிய செயலியினை புதன் அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளார். ஹலோ சேவையானது ஒத்த கருத்துள்ள மனிதர்களை அவர்களது ஆர்வங்கள் மூலமாக ஒன்றிணைப்பதன் மூலம், நேர்மறையான, அர்த்தமுள்ள மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொடர்புகளை சமூகவெளியில் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நிஜ உலகத்தில் தொடர்புகளை உருவாக்கவே நாங்கள் இதனை வடிவமைத்துள்ளோம். இது அன்பால் உருவாக்கப்பட்டுள்ளது; ‘லைக்குகளால்இல்லை. எனவே இதன் மூலம் இந்தியாவுக்கு மீண்டும் 'ஹலோ'  சொல்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.தற்பொழுது உள்ள சமூக ஊடக செயலிகள் அனைத்தும் ஒருவர் மற்றொருவருடன் நேரடி வாழ்வில் பழகுவதற்கும், சமூக ஊடகங்களில் பழகுவதற்கும் வித்தியாசம் இருப்பது போல செய்கின்றன. தற்பொழுது "ஹலோ" செயலியானது ஆப்பிள் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர்களில் கிடைக்கிறது.TAGSIndia Facebook google new app social network orkut hello introduction.


ஜிசாட்- - 6 ஏ செயற்கைக்கோள் செயலிழக்கவில்லை'
சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட, 'ஜிசாட் - 6 ' செயற்கைக்கோள் செயலிழக்கவில்லை,'' என, இஸ்ரோ தலைவர், சிவன் தெரிவித்தார்.இந்திய விண்வெளி ஆய்வு மையமான, இஸ்ரோவின் தலைவர், சிவன், திருப்பதி, திருமலை ஏழுமலையானை, சுப்ரபாத சேவையில், நேற்று காலை தரிசித்தார். இதன் பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்ட, ஜிசாட் - -6 ஏ செயற்கைக்கோள் செயலிழக்கவில்லை. கட்டுப்பாட்டு அறை - செயற்கைக்கோள் இடையேயான தொடர்பு மட்டுமே துண்டிக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோளுடன், மீண்டும் தொடர்பை ஏற்படுத்த தீவிர முயற்சிகள் நடக்கின்றன.நாளை காலை, 4:04 மணிக்கு, சென்னை அருகேயுள்ள ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து, 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., - 11' 

  
சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியருக்கு விருது
பேராசிரியருக்கு, அப்துல்கலாம் பெயரிலான, தேசிய ஆராய்ச்சியாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, தேசிய இன்ஜினியரிங் அகாடமி ஆகியவை சார்பில், மறைந்த விஞ்ஞானி அப்துல்கலாம் நினைவாக, தேசிய ஆராய்ச்சியாளர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது, சென்னை, ஐ.ஐ.டி., மெக்கானிக்கல் துறை, தலைமை பேராசிரியர், கிருஷ்ணன் பாலசுப்ரமணியனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 'அல்ட்ராசோனிக் அலை சென்சார்' அமைப்புகளுக்கான ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக, தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அறிவித்துள்ளது.


திருவிடந்தையில் ராணுவ கண்காட்சி : இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர்
திருவிடந்தையில், 'டிபெக்ஸ்போ- - 18' என்ற, பிரமாண்டமான ராணுவ கண்காட்சியை, பிரதமர் நரேந்திர மோடி, இன்று முறைப்படி துவக்கி வைக்கிறார்.மத்திய பாதுகாப்பு அமைச்சகம்சார்பில் நடத்தப்படும், 'டிபெக்ஸ்போ- - 18' என்ற ராணுவ கண்காட்சி, நேற்று,சென்னையை அடுத்த,திருவிடந்தையில்துவங்கியது.கண்காட்சி, வரும், 14ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில், ராணுவ கண்காட்சி நடத்தப்படுவது, இதுவே முதல் முறை. ராணுவ தளவாட உற்பத்தியில், இந்தியாவின் வலிமையை, சர்வதேச அளவில் வெளிப்படுத்தவும், உள்நாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின், தளவாட உற்பத்திகளை அதிகரிக்கவும், 800 கோடியில், இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.கண்காட்சியில், 162 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட, 701 ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, மொத்த அரங்கில், 15 சதவீத இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.'பெல், டாடா, பிரம்மாஸ்' உள்ளிட்ட முக்கிய இந்திய நிறுவனங்களும், அமெரிக்காவின் போயிங், பிரான்சின் ரபேல், ஏர்பஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களும், கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
என்ற செயற்கைக்கோளை, இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.  விஸ்டன் விருதுக்கு கோஹ்லி, மிதாலி தேர்வு
கிரிக்கெட்டின் பைபிள் என புகழப்படும் விஸ்டன் இதழின் இந்த ஆண்டுக்கான சிறந்த வீரராக விராத் கோஹ்லியும், சிறந்த வீராங்கனையாக மிதாலி ராஜூம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 1889ஆம் ஆண்டு முதல்  சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விஸ்டன் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 5 பேருக்கு இவ்விருது வழங்கப்படும். இதில், இந்தாண்டுக்கான விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லியும், மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜூம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோஹ்லி கடந்த 2017ல் நடந்த அனைத்து விதமான போட்டியிலும் சேர்த்து மொத்தம் 2,818 ரன் குவித்துள்ளார். மிதாலி ராஜ், இந்திய அணியை உலக கோப்பை இறுதிப் போட்டி வரை கொண்டு சென்றார். மேலும் அவர் மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீராங்கனை என்ற சாதனைக்கும் சொந்தக்காரராவார். இதுதவிர, உலக கோப்பை வென்ற இங்கிலாந்து அணியின் 3 வீராங்கனைகள் விருதுக்கு தேர்வாகி  உள்ளனர். விஸ்டன் விருது பெறும் 5 பேரில் 4 வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் விளையாட்டு 
கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் நேற்று இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்தது. மகளிர் பிரிவில் ஸ்ரேயாஷி சிங் தங்கம் வெல்ல, ஓம் மிதர்வால், அன்குர் மிட்டல் இருவரும் வெண்கலம் கைப்பற்றினர். குத்துச்சண்டை போட்டியில் நட்சத்திர வீராங்கனை மேரி கோம் பைனலுக்கு முன்னேறி தங்கப்பதக்கத்தை நெருங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரில் நேற்று மகளிர் டபிள் டிராப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது.  இதில், இந்தியாவின் ஸ்ரேயாஷி சிங், வர்ஷா வர்மன் உட்பட 10 வீராங்கனைகள் பைனலுக்கு தகுதி பெற்றனர்.  ஸ்ரேயாஷி சிங், ஆஸ்திரேலியாவின் எம்மா காக்ஸ் இடையே கடும் போட்டி நிலவியது. பைனலின் 4 சுற்றுகளின் முடிவில் ஸ்ரேயாஷி (24, 25, 22, 25 புள்ளிகள்), காக்ஸ் (23, 28, 27, 18) தலா 96 புள்ளிகளுடன் சமநிலை பெற்றனர். 
இதனால் ஷூட் ஆப் முறையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டது. இதில், ஸ்ரேயாஷி 2 வாய்ப்புகளிலும் இலக்கை துல்லியமாக சுட 96+2 என்ற கணக்கில் தங்கம் வென்றார். காக்ஸ் (96+1) வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். 86 புள்ளிகளை பெற்ற வர்ஷா வர்மன் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெண்கலத்தை வெல்லத் தவறினார். 

டெல்லியை சேர்ந்தவரான ஸ்ரேயாஷி, 2014 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதே போல ஆண்கள் 50 மீ பிஸ்டஸ் பிரிவில் இந்தியாவின் ஓம் மிதர்வால் 201.1 புள்ளிகளுடன் வெண்கலமும், டபிள் டிராப் பிரிவில் அன்குர் மிட்டல் 53 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர். இத்தொடரில் மிதர்வால் பெறும் 2வது பதக்கம் இது. ஏற்கனவே இவர் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்றுள்ளார். 

மகளிர் குத்துச்சண்டை 48 கிலோ எடைப்பிரிவு கால் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான மேரி கோம், 
இலங்கையின் அனுஷா தில்ருக்‌ஷியை எதிர்த்து விளையாடினார். இதில் மேரி கோம் 5-0 என்ற கணக்கில் எளிதாக வென்று இறுதிக்கு முன்னேறியுள்ளார். நாளை மறுதினம் நடக்க உள்ள பைனலில் மேரி கோம், வடக்கு அயர்லாந்தின் கிறிஸ்டினா ஓஹராவை சந்திக்கிறார். இப்போட்டியில் மேரி கோம் வெற்றி பெற்று தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

2014 கிளாஸ்கோ காமன்வெல்த்தில் வெள்ளி வென்ற சரிதா தேவி, (65 கிலோ பிரிவு). 2014ல் வெண்கலம் வென்ற பிங்கி சிங்கும் (51 கிலோ) கால் இறுதியில் தோல்வி அடைந்தனர். அதே நேரத்தில், ஆண்கள் குத்துச்சண்டை 52 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் கவுரவ் சோலங்கி, 75 கிலோ பிரிவில் விகாஸ் கிஷன், 60 கிலோ பிரிவில் மணிஷ் கவுசிக் ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.

ஆண்கள் ஹாக்கியில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்தை சந்தித்தது. இப்போட்டியில் 
59வது நிமிடத்தில் மன்தீப் சிங் கோல் அடிக்க இந்தியா 4-3 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. இதன் மூலம், 4 லீக் போட்டியில் 3 வெற்றி, 1 டிராவுடன் நமது அணி 10 புள்ளிகள் பெற்று பி பிரிவில் முதல் இடத்தை பிடித்தது. இங்கிலாந்து 7 புள்ளிகளுடன் 2ம் இடம் பெற்றது. இரு அணிகளும் ஏற்கனவே அரை இறுதிக்கு முன்னேறி விட்டன. அரை இறுதியில் இந்தியா, நியூசிலாந்தையும், இங்கிலாந்து-ஆஸ்திரேலியாவையும் சந்திக்கிறது. இன்றைய 7ம் நாள் போட்டியின் முடிவில் இந்திய அணி 12 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் 3வது இடத்தில் உள்ளது.
EmoticonEmoticon