Current Affairs for Competitive Examination-2018 | 07-04-2018-Free Download இன்றைய நடப்பு நிகழ்வுகள்


Current Affairs for Competitive Examination-2018
TNPSC,TRB/TET/SLET


தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமாருக்கு குவிகிறது வாழ்த்துக்கள்
கோல்ட் கோஸ்ட் 21 வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஆண்கள் பளு துக்கும் பிரிவில் 77 கி.கி. பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் ஸ்னாட்ச் பிரிவிவ் அதிகபட்சமாக 3வது வாய்ப்பில் 144 கி.கி. எடை தூக்கினார். கிளின் அண்டி ஜெர்க் அபார திறமையை வெளிபடுத்தினார். ஒட்டுமொத்தமாக் 317 கி.கி. எடை துக்கி முதல் இடம் பெற்று தங்க பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா மூன்று தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

வெண்கலம் வென்றார் தீபக்
கோல்ட் கோஸ்ட் 21 வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஆண்கள் பளு துக்கும் பிரிவில் 69 கி.கி. எடைப்பிபிவில் இந்தியா சார்பாக டில்லியை சார்ந்த தீபக் லேதர், 18 பங்கேற்றார், ஸ்னாட்ச் 136 கி.கி, , கிளின்அண்டி ஜெர்க 159 கி.கி பிரிவுகளை சேர்த்து ஒட்டுமொத்தமாக் 295 கி.கி. எடை துக்கி மூன்றாவது இடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.

டேவிஸ் கோப்பை- பயஸ் சாதனை
சீனாவின் டியான்ஜின் பகுதியில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் , ஆசிய-ஓசியானா பிரிவு குருப்-1 இரண்டாவது சுற்று நடக்கிறது. இதில் இந்தியா, சீனா அணிகள் மேதுகின்றன. முதல் நாளில் நடந்த இரண்டுஒன்றையர் போட்டிகள் முறையே ராம்குமார் ராமநாதன், சுமித் நாகல் தோல்வயடைந்தனர், இதனால் இந்திய அணி தோல்வி அடைந்தது, ஆனாலா சீனியர் பிரிவில் பயஸ்-போபண்ணா இணை சீனாவின் மோ சின், சிகாங் ஜோடியை சந்தித்து முதல் செட்டை 5-7 என இழந்த இந்திய ஜோடி, பின் எழுச்சி பெற்று அடுத்த இரண்டு செட்டையும் 7-6, 7-6 என போராடி கைப்பற்றியது. இது பயசின் 43 வது வெற்றியாக அமைந்த்து. இதன் மூலம் டேவிஸ் கோப்பே அரங்கில் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றியை பெற்றவர்கள் பட்டியலில் நிகோலா
பீட்ராங்கெலியை வீழ்த்தி முதல் இடத்தை பிடித்து சாதித்தார்.

அண்ணா பல்கலைக்கு தேசிய விருதுகள்
தேசிய கல்வி நிறுவனங்களின், தரவரிசை பட்டியலில், அண்ணா பல்கலை, ஒட்டுமொத்தப் பிரிவில், பத்தாவது இடம் பிடித்தது. அதற்கான விருதுகளை, முதல்வர் பழனிசாமியிடம் அளித்து, உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் வாழ்த்து பெற்றார்.இந்த ஆண்டுக்கான, தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில், அண்ணா பல்கலை, அகில இந்திய அளவில், 10வது இடம் பிடித்தது. நான்காம் இடம்
இது தவிர, தமிழகத்தில் உள்ள, 19 கல்வி நிறுவனங்கள், பட்டியலில் முதல், 100 இடங்களுக்குள் வந்துள்ளன.பல்கலைகளுக்கான பிரிவில், அண்ணாப் பல்கலை, நான்காமிடம் பெற்றுள்ளது. இது தவிர, தமிழகத்தில் உள்ள, 21 பல்கலைகள், முதல், 100 இடங்களுக்குள் வந்துள்ளன. பொறியியல் பிரிவில், அண்ணா பல்கலை, எட்டாமிடம் பெற்றுள்ளது. இது தவிர, 18 கல்வி நிறுவனங்கள், 100 இடங்களுக்குள் வந்துஉள்ளன.
கல்லுாரிகளுக்கான பிரிவில், தமிழகத்தில் உள்ள, ஐந்து அரசு கல்லுாரிகள், 33 அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லுாரி கள், முதல், 100 இடங்களுக்குள் வந்துள்ளன.
வாழ்த்து இதற்கான விருதுகளை, டில்லியில், ஏப்., 3ல் நடந்த விழாவில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் வழங்கினார்

விவசாயிகளுக்கு வந்தாச்சு உழவன் செயலி
விவசாயிகளை மின்னணு தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல, உழவன் என்ற அலைபேசி செயலியை வேளாண் துறை அறிமுகம் செய்துள்ளது.வேளாண் துறையின் செயல்பாடுகள், தகவல்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு விரைவில் சென்றடைய, 'உழவன்' என்ற அலைபேசி செயலி தமிழ், ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளது.இதை, 'ஆன்ட்ராய்டு' அலைபேசியில் பதிவிறக்கம் செய்து, அரசின் வேளாண் மானியத் திட்டங்கள், பயிர் காப்பீடு, உரம், விதை இருப்பு அறிதல், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள், விளை பொருட்களின் சந்தை விலை, வானிலை அடிப்படையில் வேளாண் அறிவுரை பெறுதல், போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும்.வேளாண் அலுவலர்கள் கூறுகையில், 'உழவன் அலைபேசி செயலி ஏப்.,1 முதல் செயல்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களுக்காக தள்ளி போடப்பட்டுள்ளது. 'செயலியை பதிவிறக்கம் செய்து, மேல் விபரங்களை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களில் பெறலாம்'

உள்ளூர் உணவுக்கு செயலி அறிமுகம்
ரயில் பயணியர் உள்ளூர் உணவு வகைகளை ஸ்டேஷன்களில் பெறும் விதமாக மொபைல் போன் செயலியை, .ஆர்.சி.டி.சி., அறிமுகம் செய்துள்ளது.இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், '- டிக்கெட்' பயணியருக்கு பல்வேறு சலுகைகளையும், வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறது. ரயில்களில் தலையணை, மெத்தை உள்ளிட்ட வசதிகளுடன், விரும்பிய உணவு வகைகளை முன்பதிவு செய்துகொள்வது இதன் சிறப்பம்சம்.தற்போது, விரும்பும் உள்ளூர் உணவு வகைகளை பெறும்விதமாக, 'புட் ஆன் டிராக்' எனும் மொபைல் போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுஉள்ளது..ஆர்.சி.டி.சி., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மொபைல் போன் செயலி யில், பி.என்.ஆர்., எண் குறிப்பிட்டு, ஸ்டேஷன், உணவு வகை உள்ளிட்ட விபரங்களை தேர்வுசெய்தால், குறிப்பிடப்பட்ட ஸ்டேஷனில் ரயிலில் இருந்தவாறு உணவை பெற்றுக்கொள்ளலாம். 'முதற்கட்டமாக, 1, ஏ அந்தஸ்து பெற்ற ஸ்டேஷன்களில், 'பேன்ட்ரி' வசதி இல்லாத ரயில் பயணி யருக்கு இந்த வசதி வழங்கப்பட்டு வருகிறது. வரவேற்பை பொறுத்து இதர ரயில்களுக்கும் இவ்வசதி விரிவுபடுத்தப்படும்'

இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்- பளுதூக்குதலில் ஆந்திர வீரர் வெங்கட் ராகுல் சாதனை
காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 85 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த வெங்கட் ராகுல் ரகாலா கலந்து கொண்டார். இவர் ஸ்னட்ச் முறையில் 151 கிலோவும், க்ளீன்-ஜேர்க் முறையில் 187 கிலோ எடையும் தூக்கி ஒட்டுமொத்தமாக 338 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார்.சமோயா வீரர் 331 கிலோ எடையை தூக்கி வெள்ளியும், மலேசிய வீரர் 328 கிலோ எடையை தூக்கி வெண்கல பதக்கமும் வென்றனர். இந்த தங்கப் பதக்கம் மூலம் இந்தியா பளுதூக்குதல் போட்டியில் நான்கு தங்கத்தை கைப்பற்றியுள்ளது.


அம்மா வை-பை வசதியை பயன்படுத்துவது எப்படி?
முதல் கட்டமாக சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பகுதியில் ‘வை-பை’ மண்டலத்தை முதல்-அமைச்சர் நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.இதேபோல் கோவை காந்திபுரம் பஸ்நிலையம், சேலம் மத்திய பஸ் நிலையம், மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ்நிலையம் ஆகிய இடங்களிலும் ‘வை-பை’ சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அம்மா வை-பை’ வசதியை எப்படி பயன்படுத்துவது என்ற விவரம் வருமாறு:-
ஆண்டிராய்டு செல்போன் வைத்திருப்பவர்கள் உழைப்பாளர் சிலை பகுதியில் சென்றதும் அவர்களது செல்போன் ‘வை-பை’ ஆன் செய்ததும் பல நெட்ஒர்க் சேவைகளை காட்டும். அதில் ‘அம்மா வை-பை’ என்ற நெட் ஒர்க்கை இணைப்பில் எடுத்துக் கொண்டால் உள் நுழையும் பக்கம் காண்பிக்கும். அதை கிளிக் செய்து திறந்ததும் பதிவு செய்யும் பக்கம் வரும்.அதில் செல்போன் எண் மற்றும் இ.மெயில் முகவரியை பதிவு செய்ததும் எஸ்.எம்.எஸ். மூலம் ஓ.டி.பி. எண் வரும். அந்த ஓ.டி.பி. எண்ணை பதிவு செய்ததும் ‘பை-பை’ இணைப்பு கிடைத்து விடும்.அதன்பிறகு கூகுள், வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.இங்கு ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் மட்டுமே ‘வை-பை’ இலவசமாக கிடைக்கும். 20 நிமிடம் முடிந்ததும் தானாகவே இணைய தள இணைப்பு துண்டிக்கப்பட்டு விடும்.

தொடர்ந்து கட்டணம் செலுத்தும் பக்கம் செல்போனில் தோன்றும். அதில் 1 மணி நேரம், 2 மணி நேரம் பேக்கேஜ் காண்பிக்கும். அதில் தேவையான பேக் கேஜ்ஜை தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கு ரூ.10, ரூ.20 என்ற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும்.இதற்கான கட்டணத்தை நெட்பேங்கிங், டெபிட்கார்டு, கிரிடிட்கார்டு பயன்படுத்தி செலுத்தலாம்.இந்த ‘வை-பை’ மண்டலங்களை அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேசன் நிர்வகித்து வருகிறது. #AmmaWiFi


உலக சுகாதார தினம்:
உலகின் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக் கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே உலக சுகாதார அமைப்பின் நோக்கமாகும். இந்நிறுவனம் உலக பொது சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்பு பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது.இந்நிறுவனம் 1948-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி தொடங்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ளது. இதன் முக்கிய வேலை திட்டம் தொற்றுநோய்கள் போன்ற நோய் நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் பொது சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும். அந்த அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 7-ம் தேதியை உலக சுகாதார தினமாக கொண்டாடுகின்றனர்.

காமன்வெல்த் 2018- ஜிம்னாஸ்டிக்கில் இந்திய வீரர் யோகேஷ்வர் சிங்கிற்கு 14-வது இடம்
காமன்வெல்த் போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான தனிப்பிரிவு ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் ஆல்-ரவுண்டு பிரிவில் இந்தியா சார்பில் யோகேஷ்வர் சிங் கலந்து கொண்டார்.மொத்தம் 18 நாட்டைச் சேர்ந்த வீரர்கள்
இதில் கலந்து கொண்டனர். 6 பிரிவுகளாக நடைபெற்ற இதில் யோகேஷ்வர் சிங் 90 புள்ளிகளுக்கு 75.600 புள்ளிகள் பெற்று 14-வது இடம் பிடித்தார்.இங்கிலாந்து வீரர் நைல் வில்சன் 84.950 புள்ளிகள் பெற்று முதலிடமும், மற்றொரு இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஹால் 83.975 புள்ளிகள் பெற்று 2-வது இடமும், சைபிரஸ் வீரர் மரியோஸ் ஜார்ஜியோ 83.750 புள்ளிகள் பெற்று 3-வது இடமும் பிடித்தனர்.


பி.எஸ்.எல்.வி c-41 ராக்கெட் 12ம் தேதி ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு
ஸ்ரீஹரிக்கோட்டா: பி.எஸ்.எல்.வி c-41 ராக்கெட் 12ம் தேதி காலை 4 மணிக்கு ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 1,425 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி ராக்கெட் செலுத்தும், கடல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.EmoticonEmoticon