Current Affairs for Competitive Examination-2018 | 26-03-2018-Free Download இன்றைய நடப்பு நிகழ்வுகள்



Current Affairs for Competitive Examination-2018
TNPSC,TRB/TET/SLET

ஏப்ரல் 5 முதல் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதி முதல் நீட் பயிற்சி மையம் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மருத்துவ மாணவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழக அரசு அளிக்கும் இலவச பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் 8 ஆயிரம் மாணவர்கள், நீட் பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களில் 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேரடி பயிற்சியும், மீதமுள்ள 6 ஆயிரம் மாணவர்களுக்கு மின்னணு முறையிலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நேரடி பயிற்சி பெறும் 2 ஆயிரம் மாணவர்கள், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 8 முகாம்களில் 25 நாட்கள் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெறுவார்கள். அவர்களுக்கு தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஏர் போர்டுக்கு நடக்க வேண்டாம்: வந்துவிட்டது வால்கலேட்டர்
சென்னை: மெட்ரோ ரயில் நிலையம் மூலமாக சென்னை விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் 602 மீட்டர் தூரத்துக்கு வால்கலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக பொருத்தப்பட்ட இந்த வால்கலேட்டர் வசதியை விமானப் போக்குவரத்துத் துறை செயலர் ஆர்.என். சௌபே முன்னிலையில், தமிழக முதன்மைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று துவக்கி வைத்தார். 602 மீட்டர் தூரத்துக்கு 12 வால்கலேட்டர்கள்  பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏராளமான பயணிகள் பயனடைவார்கள். விரைவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் செக்-இன் கவுண்டர்களும் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் புதிதாக 4 விமான நிலையங்கள்
விமான நிலைய ஆணைய செயலாளர் ஆர்.என்.சோபே, ஒசூர், நெய்வேலி, தஞ்சை, வேலூர் ஆகிய 4 விமான நிலையங்கள், இந்த ஆண்டுக்குள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


போலீஸ் ஸ்டேஷனில் சூரிய மின் சக்தி: தமிழகத்தில் முதல்முறை
தி.நகர், மேற்கு மாம்பலம்போலீஸ் ஸ்டேஷன்கட்டடத்தின் மேல் தளத்தில், 3 கிலோ வோல்ட் மின் சக்தி கொண்ட, ஏழு சூரிய தகடுகள் அமைக்கப்பட்டன. இதனால், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை, 900 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த திட்டத்தால், ஸ்டேஷன் மின் கட்டணம், 15 சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், தடையில்லா மின்சாரம் பெற முடியும். தமிழகத்திலேயே, முதல்முறையாக, இங்கு தான், சூரிய மின் சக்தி திட்டம், போலீஸ் ஸ்டேஷனில் அமல்படுத்தப்பட்டுள்ளது.காவல் நிலையத்தின் பின்புறம், தனியார் பங்களிப்புடன், 50 பேர் அமரக்கூடிய வகையில், கலந்தாய்வு கூடம் கட்டப்பட்டு உள்ளது.


இலங்கை - தனுஷ்கோடி ;ஆந்திர காவலர் நீச்சல் சாதனை
இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு, 8:25 மணி நேரத்தில் நீந்தி, ஆந்திராவை சேர்ந்த காவலர், சாதனை படைத்தார். தனுஷ்கோடி முதல் இலங்கை தலைமன்னார் வரையிலான, 33 கி.மீ., துாரத்தை, 1960ம் ஆண்டு முதல், தற்போது வரை, 13 பேர் நீந்தி உள்ளனர். விசாகப்பட்டினம் : இதில், 1994ல், 12 வயதில் குற்றாலீஸ்வரன், 12 மணி நேரத்தில் நீந்தி சாதனை படைத்தார். இந்நிலையில், நீச்சல் வீரரும், ஆந்திரா, விசாகப்பட்டினத்தை சேர்ந்த போலீஸ்காரருமான துளசி சைதன்யா, 30, புதிய சானையை ஏற்படுத்தி உள்ளார். இவர், 24ம் தேதி, இரவு, 1:00 மணிக்கு, இலங்கை தலைமன்னார் கடலில் குதித்து, ஜி.பி.எஸ்., கருவி உதவியுடன் நீந்தி, நேற்று காலை, 9:25 மணிக்கு, தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வந்தார். 8.25 மணி நேரத்தில் இச்சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம், இக்கால்வாயை 12 முதல் 20 மணி நேரம் வரை நீந்தியவர்களின் சாதனையை, முறியடித்துள்ளார்.


சேலம் - சென்னை இடையே விமான சேவை தொடக்கம்
ஓமலூரை அடுத்த காமலாபுரத்தில் 165 ஏக்கர் பரப்பில் 1993-ம் ஆண்டு விமான நிலையம் அமைக்கப்பட்டது. முதன் முதலில் சேலத்தில் இருந்து சென்னைக்கு என்இபிசி நிறுவனம் விமானத்தை இயக்கியது. பல்வேறு காரணங்களால் விமான சேவை நிறுத்தப்பட்டது, பின்னர் 2009-ல் மீண்டும் சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டது. போதிய அளவில் பயணிகள் வராததால் 2010-ம் ஆண்டு விமான சேவை நிறுத்தப்பட்டது.இந்நிலையில், மத்திய அரசு சார்பில் சிறு நகரங்களை விமான சேவை மூலம் இணைக்கும் ‘உடான்’ திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி சேலத்தில் இருந்து 8 ஆண்டுகளுக்குப் பின்னர் விமான சேவை இன்று (25-ம் தேதி) முதல் தொடங்கப்பட்டது. ட்ரூ ஜெட் விமான நிறுவனம் சேலம்- சென்னை இடையே 72 இருக்கைகள் கொண்ட விமானத்தை இயக்கியது. விமான சேவை துவங்கியது.  விமானத்தை முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.



அதிவேக 100 விக்கெட்: ஆப்கான் ஸ்பின்னர் ரஷீத் கான் உலக சாதனை
மிகக் குறைந்த ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை ஆப்கானிஸ்தான் லெக் ஸ்பின் பந்துவீச்சாளர் ராஷீத் கான் இன்று படைத்தார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் 52போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், ராஷித் கான் 44 போட்டிகளிலேயே 100 விக்கெட்டுகளை சாய்த்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டம் நடந்து வருகிறது. இதில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை எதிர்த்து ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இரு அணிகளும் உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றாலும் ஒருமுறைக்காகவே இந்த போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் வீரர் ஷாய் கோப் விக்கெட்டை வீழ்த்தியபோது, 100-வது விக்கெட் என்ற மைல்கல்கை ராஷித் கான் அடைந்தார். 19வயதான இளம் வீரர் ராஷித்கான் அடைந்திருக்கும் மிகப்பெரிய சாதனையாகும். அதுமட்டுமல்லாமல் 50 விக்கெட்டுகளை 26 போட்டிகளில் அடைந்தார்.  இதையடுத்து, ஆஸ்திரேலிய வீரர் மிட்ஷெல் ஸ்டார்க், பாகிஸ்தான் வீரர் சக்லைன் முஷ்டாக்(53 போட்டி), ஷேன் பாண்ட்(54போட்டி), பிரட் லீ (55 போட்டி) ஆகியோரின் சாதனைகளை ராஷித் கான் முறியடித்துள்ளார்.  சேலத்திலிருந்து காலை 11 மணிக்கு கிளம்பும் இந்த விமானம், 11.50 மணியளவில் சென்னையை சென்றடையும். அதேபோல் சென்னையிலிருந்து 9.50 மணிக்கு கிளம்பும் விமானம், சேலத்தை 10.40 மணிக்கு வந்தடையும். ட்ருஜெட் சார்பில் 72 பேர் பயணிக்கும் இந்த விமானத்தில் பயணிக்க நபர் ஒருவருக்கு கட்டணமாக ரூ.1,499 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






EmoticonEmoticon