Current Affairs for Competitive Examination-2018 | 28-03-2018-Free Download இன்றைய நடப்பு நிகழ்வுகள்


Current Affairs for Competitive Examination-2018
TNPSC,TRB/TET/SLET


ரோந்து கப்பல் 'பிகாய்ஜி காமா'வுக்கு பிரியாவிடை
இந்திய கடலோரக் காவல்படை ரோந்து கப்பல் பிகாய்ஜி காமா வுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சியில் கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய தளபதி ராஜன் பர்கோத்ராவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய  கப்பலின் கமாண்டன்ட கடந்த சுமார் 20 ஆண்டுகளாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த இந்தியக் கடலோரக் காவல்படை ரோந்து கப்பல் 'பிகாய்ஜி காமா' வுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி சென்னைத்துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சூரியன் மறையும் நேரத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகு தேசியக் கொடி படிப்படியாக கீழே கப்பலில் இறக்கப்பட்டு சம்பிரதாய முறைப்படி 'பிகாய்ஜி காமா' வுக்கு ஓய்வளிக்கப்பட்டு பிரியாவிடை அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய தளபதி ராஜன் பர்கோத்ரா அணிவகுப்பு மரியாதையை ஏற்றுப் பேசியது:கொல்கத்தாவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான 'கார்டன் ரீச்' கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைக்கப்பட்ட 'பிகாய்ஜி காமா' 1997 செப்டம்பர் மாதம் இந்திய கடலோரக் காவல்படையில் இணைக்கப்பட்டது. இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட புரட்சிப் பெண்மணி பிகாய்ஜி காமாவின் நினைவாக இந்த ரோந்து கப்பலுக்குப் பெயர் சூட்டப்பட்டது.இதுவரை 12 அதிகாரிகள் இக்கப்பலின் கமாண்டன்ட் பொறுப்பில் இருந்துள்ளனர். சுமார் 20 ஆண்டுகள் ரோந்து பணியில் இக்கப்பல் 
ஈடுபட்டுள்ளது. சுமார் 2,586 நாள்கள் கடலில் பயணித்த 'பிகாய்ஜி காமா' மொத்தமாக 2.47 லட்சம் கடல் மைல் தூரம் பயணித்துள்ளது. ஆபத்தான சமயங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டு 85 பேரை காப்பாற்றியுள்ளது. சுனாமி தாக்குதலின்போது இக்கப்பலின் பணி மகத்தானது. இக்கப்பல் முதலில் விசாகபட்டனம் பிரிவிலும், பின்னர் அந்தமான் நிகோபர் பகுதியிலும் இறுதியாக ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது ஓய்வளிக்கப்பட்டுள்ளது என்றார் பர்கோத்ரா. இந்நிகழ்ச்சியில் கப்பலின் கமாண்டன்ட் வருண் உபாத்தியாயா மற்றும் கடலோரக் காவல்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்: கவுன்ட்-டவுன் இன்று தொடக்கம்
இந்திய விண்வெளிஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில், தகவல்தொடர்புக்கான ஜிசாட் -6ஏ செயற்கைகோளுடன் வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட உள்ள ஜி.எஸ்.எல்.வி. -எஃப்08 ராக்கெட்டுக்கான 27 மணி நேர கவுன் -டவுன் புதன்கிழமை பிற்பகல் 1.56 மணிக்குத் தொடங்க உள்ளது.ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து வியாழக்கிழமை மாலை 4.56 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இது இஸ்ரோ அனுப்பும் 12 ஆவது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.415.6 டன் எடையும், 49.1 மீட்டர் உயரமும் கொண்ட இந்த ராக்கெட் மூலம் அனுப்பப்படும் இந்த ஜிசாட்-6ஏ தகவல்தொடர்பு செயற்கைகோள் 10 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


மதுரை - சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவை தொடக்கம்
மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி விமான சேவை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கியது.மதுரை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் வாரத்துக்கு 4 நாள்கள் விமான சேவை இருந்தது. இந்நிலையில், பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து, மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி சேவை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டது. அதன்படி, கொச்சியில் இருந்து மதுரை வந்த விமானம், மதுரையில் இருந்து பகல் 12.05 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட்டது. மேலும், இரவு 10 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து அதே விமானம் மதுரை வந்தது. பின்னர், இங்கிருந்து கொச்சிக்கு புறப்பட்டுச் சென்றது. இச்சேவையில் முதல் நாளில் மதுரையில் இருந்து சிஙகப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கும் 186 பயணிகள் வந்து சென்றுள்ளனர். அவர்களை மதுரை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தினர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். தற்போது தினசரி சேவையாக தொடங்கப்பட்ட சிங்கப்பூர் விமானம் செவ்வாய், வியாழக்கிழமைகளில் கொச்சியில் இருந்தும் மற்ற நாள்களில் புதுதில்லியில் இருந்தும் வருகின்றன. இதில், கொச்சியில் இருந்து மதுரைக்கும், மதுரையில் 
இருந்து கொச்சிக்கும் இன்னும் பயணிகள் சேவை தொடங்கப்படவில்லை என்றனர்.


350 ரூபாய் நாணயத்தை வெளியிடும் ரிசர்வ் வங்கி: ஒரு சம்பிரதாயத்துக்காக மட்டுமே
மும்பை: ஸ்ரீ குரு கோபிந்த் சிங்கின் 350வது பிறந்ததினத்தை முன்னிட்டு, அவரை சிறப்பிக்கும் வகையில் 350 ரூபாய் மதிப்புள்ள நாணயங்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் குறைந்த மதிப்புள்ள நாணயங்களின் பயன்பாடு, விலையேற்றம் 
காரணமாக செல்லாததாகி வரும் நிலையில், அதிக மதிப்புள்ள நாணயங்களை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.தற்போது மக்களின் புழக்கத்தில் இருக்கும் நாணயங்களில் 10 ரூபாய் நாணயமே உயர் மதிப்புள்ள நாணயமாக இருக்கும் நிலையில், புதிதாக 350 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ளது.44 மி.மீ. விட்டமுள்ள இந்த நாணயம், வெள்ளி, காப்பர், நிக்கல் உள்ளிட்ட உலோகக் கலவைகளின் கூட்டில் உருவாக்கப்பட உள்ளது. நாணயத்தின் முகப்பில் அசோகா தூண் அச்சிடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பின்பக்கத்தில் தக்த் ஸ்ரீ ஹரிமந்திர் ஜி பட்னா சாஹிப் என்று அச்சிடப்பட்டிருக்கும். இந்த நாணயத்தின் எடை 34.65 கிராம் முதல் 35.35 கிராம் வரை இருக்கும். ஆனால், 350 ரூபாய் நாணயத்தை எந்த அளவுக்கு ஆர்பிஐ அச்சிடப்போகிறது என்பது குறித்த தகவல்கள் இல்லை. இது ஒரு சம்பிரதாயமாக அச்சிடப்படும் நாணயம் என்பது போல, குறைந்த அளவிலேயே இந்த நாணயம் அச்சிடப்படும் என்று கருதப்படுகிறது.


தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக ஜாவத் ரஹீம் நியமனம்
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக (பொறுப்பு) நீதிபதி ஜாவத் ரஹீம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. தீர்ப்பாயத்துக்கு புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை ஜாவத் அப்பதவியில் நீடிப்பார் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் சார்ந்த விவகாரங்களை விசாரித்து வரும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு தலைவர் எவரும் நியமிக்கப்படாததால், இதுவரை அப்பதவி காலியாகவே இருந்தது. இதன் காரணமாக தீர்ப்பாயத்தில் உள்ள மற்ற காலிப் பணியிடங்களை நிரப்ப இயலாத சூழல் நிலவியது.


திருமண விவகாரங்களில் சமூக பஞ்சாயத்துகள் தலையிடத் தடை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
திருமண விவகாரங்களில் சமூக பஞ்சாயத்து அமைப்புகள் (காப் பஞ்சாயத்து) தலையிடுவதற்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சக்தி வாஹினி எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் கடந்த 2010ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தது. அதில் மதம், சாதி ரீதியில் கலப்புத் திருமணம் செய்யும் வயது வந்த ஆடவர், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை அண்மையில் முடிவடைந்தது. அப்போது உச்ச நீதிமன்றம், வயது வந்த இளம்ஜோடியினர் திருமணம் செய்யும்பட்சத்தில், அந்தத் திருமணத்தில் உறவினர்களோ அல்லது 3ஆவது தரப்பினரோ தலையிடவும், மிரட்டல் விடுக்கவும், துன்புறுத்தவும் முடியாது என்று கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த மனு மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு தனது தீர்ப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், 'வயது வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் விவகாரத்தில், சமூக பஞ்சாயத்து போன்ற சட்டவிரோத அமைப்புகள் தலையிடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. இத்தகைய தலையீடு, சட்ட விரோதம் ஆகும்' என்றனர்.


ஆன்டிபயாடிக் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம்: ஆய்வாளர்கள் கவலை
புது தில்லி: உணவே மருந்து என்ற தாரக மந்திரத்தை அடிப்படையாக வைத்து வாழ்ந்த மூதாதையர்களைக் கொண்ட இந்தியாதான் இப்போது ஆன்டிபயாடிக் 
மருந்துகளை அதிகம் பயன்படுத்தும் நாடாக உள்ளது.இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளைக் கொண்ட ஆராய்ச்சியாளர்களால் 
நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவில்தான் ஆன்டிபயாடிக் மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் குறிப்பாக 
2000 ஆவது ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான இந்த கால கட்டத்தில் மனிதர்களுக்கு பயன்படுத்தும் ஆன்டிபயாடிக் மருந்துகளின் அளவு கவலைப்படும் அளவுக்கு உயர்ந்துள்ளது.மேலும், சமூக பஞ்சாயத்து போன்ற அமைப்புகள், இத்தகைய திருமணத்தில் தலையிடுவதை தடுப்பது தொடர்பான வழிகாட்டு நடைமுறைகளையும் நீதிபதிகள்  வெளியிட்டனர். அப்போது நீதிபதிகள் கூறுகையில், 'சமூக பஞ்சாயத்து போன்ற அமைப்புகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்படும் வரையில், இந்த வழிகாட்டு நடைமுறைகள் அமலில் இருக்கும்' என்றனர்.



கூகுள் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் வியூ சேவையை நிராகரித்தது மத்திய அரசு
 கூகுள் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் வியூ சேவை நகரங்களின் அழகான காட்சிகளை நிஜ வாழ்க்கையில் பார்ப்பது போலவே காண வழிசெய்கிறது. கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்கள் மூலம், 360 டிகிரி முழுவதையும் படம் எடுக்க முடியும்.கடந்த ஏப்ரல் 2015-ல் கூகுள் அதிகாரிகள், உள்துறை அமைச்சகத்துக்கு, ஸ்ட்ரீட் வியூ சேவை குறித்த பிரசன்டேஷனை வழங்கினர். அப்போது சேவையின் முக்கியத்துவம் குறித்தும், சுற்றுலாத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மையில் இதன் பங்கு குறித்தும் விளக்கினர். அதி துல்லிய கேமாராக்கள் கொண்டு படங்களை எடுத்து, ஸ்ட்ரீட் வியூவில் பதிவேற்றுவது 
குறித்த மாதிரித் திட்ட விளக்க முறையையும் ஜூலை மாதத்தில் சமர்ப்பித்திருந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, கூகுளின் தலைமையகமான கலிஃபோர்னியாவுக்குச் சென்று, சுந்தர் பிச்சையைச் சந்தித்தார். இதனால் ஸ்ட்ரீட் வியூ சேவை இந்தியாவில் தொடங்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் மத்திய அரசு இன்று இதை நிராகரித்துள்ளது. மக்களவையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர், எழுத்தப்பூர்வமாக பதில் அளித்த  போது, 360 டிகிரி பனோரமிக் மற்றும் தெரு-நிலை 3D படங்கள் மூலம் உலகளாவிய இடங்களை இந்தப் பயன்பாடு ஆராய்கிறது. கைப்பற்றப்பட்ட அனைத்தும் ஆன்லைனில் இடுகின்றன.அமெரிக்கா, கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இந்தியாவில் அதன் பயன்பாடு ஒரு சில இடங்களுக்கு ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டது. சோதனை அடிப்படையில்  இந்திய தொல்லியல் சங்கத்துடன் இணைந்து தாஜ் மஹால், செங்கோட்டை, குதுப் மினார், வாரணாசி நதி வங்கி, நாலந்தா பல்கலைக்கழகம், மைசூர் அரண்மனை, தஞ்சாவூர் கோயில் மற்றும் சின்னஸ்வாமி ஸ்டேடியம், போன்ற  இடங்களை ஸ்ட்ரீட் வியூ சேவையில் பயன்படுத்தினர். ஆனால் தற்போது மத்திய அரசு கூகுள் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் வியூ சேவையை நிராகரித்துள்ளது.ஸ்ட்ரீட் வியூ சேவை ஜெர்மனி, கிரீஸ், ஸ்விட்சர்லாந்து, போலந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளில், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தகவல் பாதுகாப்பு உள்ளிட்டவைகளால் பிரச்சினைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.



ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் : தங்கம் வென்றது மானு பேக்கர்-அன்மோல் இணை
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மானு பேக்கர்-அன்மோல் இணை தங்கம் வென்றது. அத்துடன், புதிய உலக சாதனையையும் படைத்தது.ஜூனியர் மகளிர் 'ஸ்கீட்' பிரிவு துப்பாக்கி சுடுதலில் தனிநபர் பிரிவில் கனேமத் செகான் வெண்கலம் வென்றார். சிட்னி நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்புப் பிரிவில் இந்தியாவின் 17 வயது ஸ்ரேயா அகர்வால், 19 வயது அர்ஜூன் பாபுதாஆகியோர் 432.8 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றனர். இதே பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய சகநாட்டவர்களான இளவேனில் வாளரிவன் இளவேனில் (18), தேஜஸ் கிருஷ்ண பிரசாத் (20) ஆகியோர் 389.1 புள்ளிகளுடன் 4-ஆவது இடம் பிடித்தனர். இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே மானு பேக்கர்-அன்மோல் இணை ஆதிக்கம் செலுத்தி வந்தது. இறுதிச்சுற்றில் 478.9 புள்ளிகள் பெற்று ஜூனியர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் புதிய உலக சாதனையை இருவரும் படைத்தனர். இதில், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை சீனா தட்டிச் சென்றது. முன்னதாக, திங்கள்கிழமை நடைபெற்ற 25 மீட்டர் ராபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அனீஷ் பன்வாலா தங்கம் வென்றார். சிட்டி தொடரில் இதுவரை இந்தியா 7 தங்கம் உள்பட 18 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்தில் உள்ளது. 22 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.




EmoticonEmoticon