Current Affairs for Competitive Examination-2018 | 25-03-2018-Free Download இன்றைய நடப்பு நிகழ்வுகள்


Current Affairs for Competitive Examination-2018
TNPSC,TRB/TET
SLET

தெலங்கானா பள்ளிகளில் தெலுங்கு கட்டாயம்: 
தெலங்கானாவின் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழி பாடத்தை கட்டாயமாக்கும் மசோதா, அம்மாநில சட்டப் பேரவையில் சனிக்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி சென்னை மாணவர் சாதனை!இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை உள்ள கடல் பகுதியை 11மணி 55 நிமிடத்தில் நீந்தி, சென்னையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் சனிக்கிழமை சாதனை படைத்தார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  சென்னை முடிச்சூர் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் மகன் ராஜேஷ்வரபிரபு (20). இதைத்தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு தலைமன்னாரில் இருந்து கடலில் ராஜேஷ்வர பிரபு நீந்தத் தொடங்கினார்.  அவருக்கு சர்வதேச கடல் எல்லை வரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பு அளித்தனர்.


விஐடிக்கு சர்வதேச தரவரிசை விருது
கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் சிறந்த சேவையாற்றியமைக்காக வேலூர் விஐடிக்கு இங்கிலாந்து நாட்டின் கியூ.எஸ். அமைப்பின் வைர விருது வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் கியூ.எஸ். அமைப்பானது சர்வதேச அளவில், பிராந்திய அளவிலும், உலக தரத்திலான கல்வி வழங்குவதிலும், ஆராய்ச்சிப் பணிகளிலும் சிறந்து விளங்கும் உயர் கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து 
உயரிய மதிப்பீட்டு அங்கீகாரத்தை வழங்கி வருகிறது. இந்த அமைப்பு ஏற்கெனவே விஐடி பல்கலைக்கழகத்துக்கு ரேங்கிங் அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது கியூ.எஸ். அமைப்பு தேசிய அளவில் கற்பித்தலிலும், ஆராய்ச்சியிலும் சிறந்து விளங்கும் உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பிடு செய்து, அத்தகைய கல்வி நிறுவனங்களுக்கு கியூ.எஸ். வைரம், தங்கம் மற்றும் வெள்ளி தர மதிப்பீட்டு விருது வழங்குகிறது. 



துப்பாக்கி சுடுதல்: மானு பேக்கருக்கு தங்கம்
ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மானு பேக்கர் மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார். முன்னதாக, மெக்ஸிகோவில் சமீபத்தில் நிறைவடைந்த சீனியர் உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக பங்கேற்றிருந்த மானு பேக்கர், அதில் 2 தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி
சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய மானு பேக்கர், 235.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். தாய்லாந்தின் கன்யாகோர்ன் ஹிருன்போம் 234.9 புள்ளிகளுடன் வெள்ளியும், சீனாவின் கைமான் லூ 214.2 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.  இதே பிரிவில் போட்டியிட்ட மற்றொரு இந்திய வீராங்கனையான தேவான்ஷி ராணா, 195.3 புள்ளிகளுடன் 4-ஆவதாக வந்தார்.  மகளிர் அணியினர் பிரிவிலும் மானு பேக்கர், தேவான்ஷி ராணா, மஹிமா அகர்வால் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது. இப்பிரிவில் சீனா 2-ஆம் இடமும், தாய்லாந்து 3-ஆம் இடமும் பிடித்தன.
 2 பதக்கங்கள்: இப்போட்டியின் ஆடவர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா 2 பதக்கம் வென்றது. கெüரவ் ராணா 233.9 புள்ளிகளுடன் வெள்ளியும், அன்மோல் ஜெயின் 215.1 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர். சீனாவின் ஜீஹாவ் வாங் 242.5 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். இப்பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்த இதர இந்தியர்களில் அர்ஜுன் சிங் சீமா (152.7), அன்ஹாத் ஜவான்டா (134.4), அபிஷேக் ஆர்யா (114.5) ஆகியோர் முறையே 6, 7, 8-ஆவது இடங்களைப் பிடித்தனர். ஆடவர் அணிகள் பிரிவிலும் இந்தியாவின் சீமா, ராணா, அன்மோல் அடங்கிய அணி தங்கமும், ஜவான்டா, ஆர்யா, ஆதர்ஷ் சிங் ஆகியோர் அடங்கிய அணி வெண்கலமும் வென்றன. சீன அணி வெள்ளியை தட்டிச் சென்றது. இதேபோல், டிராப் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளி வென்றது. தற்போதைய நிலையில் இந்தியா 5 தங்கம் உள்பட 11 பதக்கங்களுடன், பட்டியலில் 2-ஆவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா 13 பதக்கங்களுடன் நீடிக்கிறது.


"வயர்லெஸ்" நகரமாகிறது வாரணாசி
உலகின் மிக தொன்மையான நகரமான வாரணாசி, மக்களுககு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில், மின்கம்பங்கள் இல்லாமல், மின்வயர்களை நிலத்திற்கடியில் புதைத்து முதன்முறையாக வயர்லெஸ் நகரமாக மாறியுள்ளது. 2015ம் ஆண்டு ஜூன் மாதத்தில், அப்போதைய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல், வாரணாசியில், மின்வயர்களை நிலத்திற்கு அடியில் புதைத்து மின்சார சேவை வழங்கும் திட்டத்திற்காக ரூ. 432 கோடி ஒதுக்கி பணிகளை முடுக்கிவிட்டார். முதற்கட்டமாக, அன்சராபாத் பகுதியில் உள்ள கபீர் நகரில் இந்த பணி துவங்கப்பட்டது. 2 ஆண்டுகள் என்ற காலநிர்ணயம் செய்திருந்தநிலையில், பணி நேர்த்தி மற்றும் சீரிய மற்றும் சிறப்பான நடவடிக்கைகளினால், இந்த பணி 2017 டிசம்பரில்  நிறைவடைந்தது.


ஆந்திராவில் உதாரண பல்கலைக்கழகம் அமைகிறது
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன், இண்டஸ் இண்ட் வங்கியின் தலைவர், சேஷசாயி, மஹிந்திரா குழுமத்தின் தலைவர், ஆனந்த் மஹிந்திரா உட்பட பல கார்ப்பரேட் நிறுவன அதிபர்கள் இணைந்து, கிரியா பல்கலைக்கழகம் என்ற கல்வி நிறுவனத்தை துவங்க உள்ளனர். இந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழு ஆலோசகராக, ரகுராம் ராஜன் பொறுப்பேற்று உள்ளார். இதில், கலை மற்றும் அறிவியல் இளங்கலைப் பாடப்பிரிவுகள் நான்கு ஆண்டுகள் பயிற்றுவிக்கப்படுகிறது. தற்போது இருக்கும் பாடதிட்டத்தில் இருந்து முற்றிலும் வேறுபடும் இது, உதாரண பல்கலைக்கழகமாக திகழும் என கூறப்படுகிறது.ஆந்திராவின் ஸ்ரீ சிட்டி வளாகத்தில், 200 ஏக்கர் பரப்பளவில், 750 கோடி ரூபாய் செலவில், இந்த பல்கலைக்கழகம் உருவாகி வருகிறது. வரும், 2019, ஜூலை முதல் செயல்படத் துவங்கும் இந்த பல்கலைக்கழகத்துக்கான மாணவர் சேர்க்கை, வரும் நவம்பர் மாதம் முதல் துவங்குகிறது. இங்கு பயில, தங்கும் வசதியுடன் சேர்த்து, 7 - 8 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என தெரிகிறது. ஏழை மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழக அரசின், மாற்றுத் திறனாளிகள் நல வாரிய உறுப்பினர்களாக, சென்னை, துறைமுகம், தி.மு.க., - எம்.எல்.ஏ., சேகர்பாபு; மயிலாப்பூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., நடராஜன்; கெங்கவள்ளி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மருதமுத்து ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கான அறிவிப்பை, சட்டசபையில், சபாநாயகர் தனபால் வெளியிட்டார். இவர்கள், எம்.எல்.ஏ., பதவியில் இருக்கும் வரை, இப்பதவியில் இருப்பர்.


300 ஆண்டு பழமையானகல்வெட்டு கண்டுபிடிப்பு
பழநி, திருஆவினன்குடிகோவில் அருகே, பங்குனிஉத்திர கல்யாண மண்டபத்தில், 300 ஆண்டுகள் பழமையான இயந்திர கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.திண்டுக்கல் மாவட்டம்,பழநி, திருஆவினன்குடி கோவில் அருகே, 24 மனை சாந்தகுல சவுமிய நாராயண கவர நாயக்கமார் பொது மண்டபம் உள்ளது. திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும் இம்மண்டபத்தில், மராமத்து பணிகள் நடக்கிறது.ஒரு துாணில் உள்ள, கல்வெட்டு குறித்து, தொல்லியல் ஆய்வாளர், நாராயணமூர்த்தி உள்ளிட்ட குழுவினர், ஆய்வு செய்தனர். அது, 300 ஆண்டுகள் பழமையான இயந்திரக் கல்வெட்டு என, தெரிய வந்துள்ளது. கல்வெட்டில், தமிழ் எண்கள், ஒன்பது சதுர கட்டங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள எண்களை எப்படி கூட்டினாலும், 15 வருகிறது. தற்கால 'சுடோகு' விளையாட்டு போல இருந்தாலும், 15ல் ஒன்றையும், ஐந்தையும் கூட்டினால், முருகனின் இயந்திரஎண், 6 என்பதை, குறிப்பிடுகிறது. பங்குனி உத்திரவிழாவின், 6ம் நாள், திருக்கல்யாணம் என்பதை குறிப்பிடும்படி உள்ளது சிறப்பாகும். மண்டப துாண்களில், மன்னர்களின் நாட்டிய பெண்களின் சிற்பங்கள், புதிதாக கண்டறியப்பட்டுள்ளன. இது, கி.பி.,13 முதல் கி.பி.,18ம் நுாற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்.


ரயில்கள் குறித்து அறிய 'க்யூ.ஆர்., கோடு' வசதி
கோடை காலத்தில், தெற்கு ரயில்வே, ஏப்ரல் முதல், ஜூன் வரை, முக்கிய நகரங்கள் இடையே, சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இந்த ரயில்கள் குறித்த அறிவிப்புகள், ஒரே தேதியில் இல்லாமல், பல தேதிகளில் வெளியிடப்படுகின்றன. இச்சிறப்பு ரயில்கள் பற்றிய முழு விபரங்களையும், பயணியர் தெரிந்து கொள்ள ஏதுவாக, 'க்யூ.ஆர்., கோடு' வசதியை, தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.இந்த, 'க்யூ.ஆர்., கோடு' வசதியில், இந்த வடிவம், முக்கிய ரயில் நிலையங்கள், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில், ஒட்டப்பட்டிருக்கும். இதை பயணியர், மொபைல் போனில், கூகுள் பிளே ஸ்டோரில், 'ஸ்கேன்' செய்து, வடிவில் தெரிந்து கொள்ளலாம்; பதிவிறக்கம் செய்து, பிரதிகளும் எடுத்துக் கொள்ளலாம்.


மின்னல் வேக விமானம்
அமெரிக்காவின் டென்வர் நகரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் 'பூம்' நிறுவனம், சூப்பர்சானிக் விமானங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம், 65 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இந்த சூப்பர்சானிக் விமானத்தில், அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் இருந்து, இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு மூன்றரை மணி நேரத்தில் சென்று விடமுடியும். சாதாரண விமானங்களில் சென்றால் 7 மணி நேரம் ஆகும். இதனால் மூன்றரை மணி நேரம், மிச்சம். இந்த விமானம் மணிக்கு 2,716 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் பெற்றது. முதல்கட்டமாக 'பேபி பூம்' என அழைக்கப்படும், இரண்டு பயணிகள் மட்டும் செல்லக்கூடிய சிறிய ரக சூப்பர்சானிக் விமானத்தை, இந்த ஆண்டுக்குள் இயக்க உள்ளது. 'பேபி பூம்' விமானத்தை தொடர்ந்து, வரும் 2023க்குள், 55 இருக்கைகள் கொண்ட சூப்பர்சானிக் விமானத்தை அறிமுகப்படுத்த உள்ளது. வேகத்தை போல, இந்த 
விமானத்துக்கான கட்டணமும் அதிகம். இதில் நியூயார்க் - லண்டன் செல்ல பயணக் கட்டணம் ரூ. 1.60 லட்சம். சாதாரண விமானங்களில் சராசரி கட்டணம் ரூ. 22,000. இத்தொழில்நுட்பம் வெற்றி பெற்றால், இனி விமானத்துறை புதிய பரிணாமத்தை நோக்கி செல்லும். பயணிகளுக்கும் அதி வேக, விமான சேவை கிடைக்கும். 







EmoticonEmoticon