அரசு பஸ்களில் சாதனை 'ஸ்டிக்கர்'
தமிழக அரசு பஸ்களில், முதல்வர் பழனிசாமி அரசின், ஓராண்டு சாதனை குறித்த, 'ஸ்டிக்கர்' ஒட்டும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. பழனிசாமி அரசின் ஓராண்டு சாதனை விழா, சென்னையில் நேற்று நடந்தது. அப்போது, ஓராண்டு சாதனை சிறப்பு மலர் வெளியிடப்பட்டதுடன், சாதனை விளக்க கண்காட்சியும் நடத்தப்பட்டது.மேலும், குறும் பாடல்கள், புகைப்படத் தொகுப்பு, முதல்வரின் உரைகள் மற்றும் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்புகளும் வெளியிடப்பட்டன. விழாவில், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.இந்த விழாவிற்கான விளம்பரமாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களின், முன்பக்க கண்ணாடியில், 'அம்மா வழியில் நல்லாட்சி; அதற்கு ஓராண்டு சாதனையே சாட்சி' என்றவாசகத்துடன், ஜெயலலிதா, பழனிசாமிஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்ட, ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.சென்னையில், விழா முடிந்த பின், மற்ற ஊர்களில் உள்ள பஸ்களில், ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
சந்திரயான்-2 விண்கலத்தை ஏப்ரல் மாதத்துக்கு பதிலாக அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.ஐ.ஆர்.என்.எஸ். செயற்கை கோள் ஏப்ரலில் விண்ணுக்கு அனுப்பப்பட இருக்கிறது. வருகிற 29-ந் தேதி ஜி.எஸ்.எல்.வி. ஜி.சாட்-6 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு வழிகாட்டும் செயலி தயாராகிக்கொண்டு இருக்கிறது. மீனவர்கள் பயன்படுத்துகின்ற வகையில் இது ஏப்ரல் மாதம் வழங்கப்படும். நமது நாட்டிற்கு நிறைய விஞ்ஞானிகள் தேவைப்படுகின்றனர். இதற்காக தற்போதைய பாடத்திட்டங்களை மாற்ற தேவையில்லை. மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளை உருவாக்குவதற்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்தப்பட வேண்டி உள்ளது.
தாஜ் மஹாலை தத்தெடுக்க ஜி.எம்.ஆர்., - ஐ.டி.சி., போட்டி
வரலாற்று சிறப்பு வாய்ந்த நினைவு சின்னங்களை தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ், தாஜ் மஹாலை தத்தெடுக்க, ஜி.எம்.ஆர்., மற்றும் ஐ.டி.சி., நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.நிறுவனங்கள் தத்தெடுக்கும் நினைவு சின்னத்தை பராமரிக்க, இந்த, 2 சதவீத தொகையிலிருந்து செலவழிக்கலாம் என, மத்திய அரசு அறிவித்தது.உ.பி., மாநிலம், ஆக்ராவில் உள்ள மிகவும் பிரபலமான, தாஜ் மஹாலை தத்தெடுக்க, ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்றுள்ள, டில்லி டேர்டெவில்ஸ் அணியின் உரிமையாளரான, ஜி.எம்.ஆர்., நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய சுற்றுலாத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. இதேபோல், ஐ.டி.சி., நிறுவனமும், தாஜ்மஹாலை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதி உள்ளது.
அம்மா கல்வியகம்' சார்பில் இலவச கையேடு வெளியீடு
அம்மா கல்வியகம்' சார்பில், அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை, மாணவர்கள் எளிதாக எதிர்கொள்வதற்காக, 'ரெடி ரெக்கோனர்' என்ற பெயரில், இலவச கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கையேடு, நேற்று வெளியிடப்பட்டது.அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், 'அம்மா கல்வியகம்' துவக்கப்பட்டது. இது, இலவச கல்வி இணையதளம். இதில், ஐ.ஐ.டி., - ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு, கட்டணம் செலுத்தி, பயிற்சி பெற முடியாத மாணவர்களுக்காக, இலவசமாக, தலைசிறந்த ஆசிரியர்கள் பாடம் நடத்தும், 1,500 வீடியோக்கள் வெளியிடப்பட்டன.தற்போது புதிதாக, மாணவர்கள், அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக, இலவச கையேடு தயார் செய்துள்ளது. இதன் வௌியீட்டு விழா மற்றும் அம்மா கல்வியகம் ஓராண்டு நிறைவு விழா, நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், பழனிசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துணை ஒருங்கிணைப்பாளர், கே.பி.முனுசாமி, இலவச கையேடை வெளியிட, மாணவ, மாணவியர் பெற்றனர்.அம்மா கல்வியகம் பொறுப்பாளர், அஸ்பயர் சாமிநாதன் பேசுகையில், ''அம்மா கல்வியகத்தில், 18.34 லட்சம் மாணவர்கள், தங்கள் பெயர்களைப் பதிவு செய்து,
பயன் பெற்று வருகின்றனர். புதிதாக வெளியிடப்பட்ட கையேடு, 230 பக்கங்கள் உடையது. இந்த கையேட்டை, அம்மா கல்வியகத்தின், www.ammakalviyagam.in என்ற இணையதளத்திலிருந்து, இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,
டில்லியிலிருந்து இஸ்ரேலுக்கு 'ஏர் இந்தியா' சேவை துவக்கம்
டில்லியிலிருந்து, இஸ்ரேல் தலைநகர், டெல் அவிவுக்கு, 'ஏர் இந்தியா'நிறுவனம், நேரடி விமான சேவையை
துவக்கியுள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கு, இந்தியாவிலிருந்து, நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது.
இஸ்ரேலைச் சேர்ந்த, 'இ.எல்.ஏ.எல்., இஸ்ரேல் ஏர்லைன்ஸ்' நிறுவனம் மட்டுமே, இஸ்ரேல் தலைநகர், டெல் அவிவ் -
மும்பை இடையே, விமானத்தை இயக்கி வந்தது. மேலும், தங்கள் வான் எல்லையைப் பயன்படுத்த, இஸ்ரேல்
நிறுவனத்துக்கு, சவுதி அரேபியா அனுமதி அளிக்காததால், இந்த விமானம், மாற்று வழியில் இயக்கப்பட்டு வந்தது.
பெருவின் புதிய அதிபரானார் மார்டின் விஸ்காரா
பெரு நாட்டின் புதிய அதிபராக மார்டின் விஸ்காரா பொறுப்பேற்றார். ஊழலை ஒழிப்பதே தனது தலையாய கடமை என அவர் தெரிவித்தார். ஊழல் குற்றச்சாட்டில் பெருவின் முன்னாள் அதிபர் குசின்ஸ்கி பதவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலகக் கோப்பை
ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆடவருக்கான டிராப் பிரிவில் இந்தியாவின் விவான் கபூர் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெறும் இப்போட்டியில், டிராப் இறுதிச்சுற்றில் மொத்தம் பறக்கவிடப்பட்ட 40 களிமண் தட்டுகளில் விவான் 30 தட்டுகளை சுட்டுத் தள்ளி 3-ஆம் இடம் பிடித்தார். இப்பிரிவில் இத்தாலியின் மேட்டியோ மரோங்கியு தங்கமும், சீனாவின் யிலியு ஒளயாங் வெள்ளியும் வென்றனர். இதே பிரிவில் போட்டியிட்ட இதர
இந்தியர்களான லக்ஷய் மற்றும் அலி அமன் இலாஹி, தகுதிச்சுற்றில் முறையே 8 மற்றும் 13-ஆம் இடங்களைப் பிடித்தனர். ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் விவான் பங்கேற்பது இது 2-ஆவது முறையாகும். முன்னதாக இத்தாலியின் போர்பெட்டோ நகரில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றிருந்த விவான், அதில் 18-ஆவதாக வந்திருந்தார். இதேபோல், அணிகளுக்கான டிராப் பிரிவிலும் விவான் (113), லக்ஷய் (112), அலி அமன் (103) ஆகியோர் கொண்ட இந்திய அணி 328 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றது.
இப்பிரிவில் சீனா 335 புள்ளிகளுடன் முதலிடமும், ஆஸ்திரேலியா 331 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும் பிடித்தன. இதனிடையே, ஆடவருக்கான 50 மீ ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் சாம் ஜார்ஜ்
சஜன் 402.5 புள்ளிகளுடன் 6-ஆவது இடமே பிடித்து, இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தார். இப்போட்டியில் இந்தியா இதுவரை 2 தங்கம், 3 வெண்கலம் என 5 பதக்கங்களுடன், பட்டியலில் 2-ஆவது இடத்தில் உள்ளது. சீனா 5 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.
எம்கேரளா ஒரு ஆப்ஸ், 100 சேவைகள்
எம்கேரளா’ எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆப்ஸ் மூலம் அரசின் 20 துறைகளில் இருந்து மக்கள் தங்களுக்கு தேவையான 100 சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம். விரைவில் 80 துறைகளில் இருந்து ஆயிரம் சேவைகளாகவும் அதிகரிக்கப்பட உள்ளது. இந்த எம்கேரளா ஆப்ஸை கேரள மாநில தகவல் தொழில்நுட்ப இயக்கத்தினர் உருவாக்கியுள்ளனர். கொச்சியில் கடந்த 2 நாட்கள் நடந்த டிஜிட்டல் மாநாட்டில் இந்த செயலியை முதல்வர் பினராயி விஜயன் அறிமுகம் செய்தார்.‘‘எம்கேரளா ஆப்ஸ் மூலம் முதல்கட்டமாக 20 அரசு துறைகளில் இருந்து 100விதமான சேவைகளை மக்கள் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் 80 துறைகளில் இருந்து ஆயிரம் சேவைகளை மக்கள் பெறும் வகையில் சேர்க்கப்படும்.
EmoticonEmoticon