7th Pay commission Tamilnadu Government Pay Structure Table, Allowances,Increments, Pension Schemes,Special Allowance for PWD other others | List of Levels of Pay

Government of Tamilnadu
7th Pay Commission
G.O from 11-10-2017
by

Hon.Chief Minister of Tamilnadu


Tamilnadu 7th Pay Commission Implementation Government Order No:


Download 

 In a bonanza for nearly 12 lakh employees and teachers, the Tamil Nadu government on Wednesday announced a manifold revision in minimum and maximum wages in line with the 7th Pay Commission.Following the move, the government would incur an additional expense of Rs14,719 crore annually, chief minister K.Palaniswami said.

A meeting of the state cabinet chaired by him earlier in the day accepted the recommendations made by a panel in this regard based on the 7th Pay Commission suggestions.The new wage structure was arrived at using the 2.57 multiplication factor followed by the central government, the chief minister said.

“Accordingly minimum wage has been determined at Rs15,700 as against the existing Rs6,100 while the maximum wage will be Rs2.25 lakh,” he said in a statement.The existing maximum wage was Rs77,000. The hike in various allowances include HRA were more than previous revisions, Palaniswami said.

Further, the 2.57 multiplication factor had been used to revise pension/family pension, which will be Rs7,850.The decision would benefit seven lakh pensioners, he said.

Maximum pension would be Rs1,12,500 and family pension would be Rs 67,500, he said adding the ceiling on gratuity at the time of retirement had been increased from Rs10 lakh to Rs20 lakh.

Wage revision benefits were also being extended to nutritious meal scheme workers, Anganwadi staff and village panchayat officers, the chief minister said. He also announced a 30% hike for those employees receiving consolidated pay.


தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 7வது ஊதியக் குழு அடிப்படையில் இந்தக் குழு ஊதிய உயர்வை பரிந்துரைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி கடந்த 3 நாட்களாக அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

திருத்திய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்றவை குறித்து இந்தக் குழு ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட 5 பேர் இடம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 7ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க ‘‘அலவலர் குழு’’ ஒன்றை உடனடியாக அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.

இக்குழுவில் உறுப்பினர்களாக, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர், பி.உமாநாத் (உறுப்பினர் செயலாளர்) ஆகியோர் இருப்பர். இந்த “அலுவலர் குழு” மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இக்குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

இக்குழு, இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்கும். அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள் இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகிதம் / ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்குழு தனது அறிக்கையை நான்கு மாத காலத்திற்குள், அதாவது 30.06.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.. செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி. தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

அது ஊதியக் குழு அடிப்படையில் ஊதிய உயர்வை இந்தக் குழு பரிந்துரைக்கும் என தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மாதத்துக்குள் இந்தக்குழு தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
கடந்த திங்கள் கிழமை முதல்வராக தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி, கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட 5 முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டு அறிவிப்புகளை வெளியிட்டார். நேற்று விவசாயிகளுக்கு 2247 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் அறிவித்தார். இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தும் வகையில் 7வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

Allowance, Pay Structure,Download




EmoticonEmoticon